மட்டக்களப்பு துறைநீலாவணையில் இன்று பிற்பகல் 4.00 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி -மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்திருந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

பேக்கரி உணவு விற்பனை செய்யும் முச்சக்கர வண்டியின் சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

குறித்த இளைஞர் சம்பவத்தில் படுகாயமடைந்து கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரழந்தவர் 26  வயதுடைய கருணாநிதி ரஜிந்தன்  என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பேக்கரி உணவு விற்பனை செய்யும் முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.