பாதாள உலகக் குழு செய்யவில்லையாயின் அப்போதைய அரசாங்கமா செய்தது ; அமைச்சரவைப் பேச்சாளர் கேள்வி

Published By: Priyatharshan

01 Mar, 2017 | 05:59 PM
image

முன்னைய ஆட்சிக்காலத்தில் களுத்துறை சம்பவம் போன்று நடைபெறவில்லையா?  அப்படியாயின்  முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களை பாதாள உலகக் குழு செய்யவில்லையாயின் அப்போதைய அரசாங்கமா செய்ததென அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன கேள்வியெழுப்பினார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்  செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவரால் களுத்துறை சிறைச்சாலையில் இருந்து வந்த பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம்  தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் ராஜித சேனாரட்ன அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அது தொடர்பில் விசாரணை  நடைபெற்று வருகிறது. இது முதல்தடவையல்ல, இதற்கு முன்னரும் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.  எவ்வாறெனினும் விசாரணை நடைபெற்று வருகின்றது. பொலிஸ் அதிகாரியொருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது. 

முன்னைய ஆட்சிக்காலத்தில் இவ்வாறு நடைபெறவில்லையா?  அப்படியாயின்  முன்னைய ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற சம்பவங்களை பாதாள உலகக் குழு செய்யவில்லையாயின் அப்போதைய அரசாங்கம் செய்ததா? 

அதனை முன்னைய அரசாங்கமே முன்னெடுத்து இந்தக் கொலைகளை செய்தததாகவே  நாங்கள் கருதுகிறோம்.  அதுதான் எங்கள் நிலைப்பாடு.

சிறைகளுக்கு செல்லும் அரசியல்வாதிகள், செல்வந்தர்கள், பாதாள உலகக் கோஷ்டியினர் என உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.  இதற்கு  சில வைத்தியர்கள் உதவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனால்  இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்த  குறிப்பிட்ட வைத்தியர்களை இடமாற்றியிருக்கின்றேன் எனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11