பொறுப்புக்கூறல், மனித உரிமை பாதுகாப்பில் இலங்கை உரிய வகையில் செயற்பட வில்லை - பிரித்தானிய பாராளுமன்றில் சூடான விவாதம்

01 Mar, 2017 | 05:37 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

பொறுப்புக்கூறல், மனித உரிமை பாதுகாப்பு மற்றும் மீளமைப்பு விடயங்களில் இலங்கை உரியவகையில் செயற்படவில்லை என தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விவாதத்தை ஆரம்பித்த தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் ஜேம்ஸ் பெரி, சிறிய அளவான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதும் அவை போதுமானதாக இல்லை என சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானங்கள் இலங்கையில் அமுல்படுத்தப்படவில்லை. எனவே இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பிரித்தானிய பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்போவதாக அந்நாட்டு தொழிற்கட்சி அறிவித்திருந்தது.

பிரித்தானிய தொழிற் கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பன் இந்த விடயத்தை அறிவித்திருந்தார். இலங்கை மற்றும் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களின் சுயாதீன தன்மை தொடர்பில் நேற்று  செவ்வாய்கிழமை பிரித்தானிய பாராளுமன்றத்தில் இந்த விவாதம் இடம்பெற்றது.

விவாதத்தின் போது பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் இயன் பாஸ்லே, சமாதானத்தை கட்டியெழுப்புவது இலகுவான விடயம் இல்லை என்று குறிப்பிட்டார். இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டிருப்பதாகவும், அதனை வரவேற்க வேண்டும் என்றும் அவர்  சுட்டிக்காட்டினார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெனிவாவில் உறுதி மொழி வழங்கிய விடயங்கள் மற்றும் ஜெனிவா தீர்மானத்தின் முன்னேற்றங்கள் குறித்து கருத்தில் கொள்ளப்பட்ட நிலையில் , இலங்கை உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் உரிய கால அட்டவனையை கொண்டிருக்க வில்லை என குற்றம் சுமத்தப்பட்டது. 

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் திங்கட் கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பிரித்தானிய தொழிற்கட்சி இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07