களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த பிர­பல பாதாள உலகக் கோஷ்­டியின் தலை­வ­னான 'ரணாலே சமயா' அல்­லது சமயங் என அறி­யப்­படும் அருண தமித் உத­யங்க பத்­தி­ரணவின் உடல் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் கடுவலையில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பிரதேசத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறாமல் இருப்பதற்காகவே பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

களுத்­துறை வடக்கு சிறைச்­சா­லையில் இருந்து கடு­வலை நீதிவான் நீதி­மன்­றுக்கு பாதாள உலகக்  கோஷ்டி  சந்­தேக நபர்­களை ஏற்றி சென்ற சிறைச்­சாலை பஸ் வண்டி மீது கடந்த திங்கட்கிழமை (27) காலை 8.30 மணியளவில் களுத்­துறை, மல்­வத்த - எத்­த­ன­ம­டல பகு­தியில் வைத்து சர­ம­hரி­யான துப்­ப­hக்கிச் சூடு நடத்­தப்­பட்­டது. இதில்  பிர­பல பாதாள உலகக் குழு நபரான சமயங் எனப்படும்  அருண தமித் உத­யங்க பத்­தி­ரண உள்­ளிட்ட 5 கைதி­களும் இரண்டு சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­களும் கொல்­லப்­பட்­டமை குறிப்பிடத்தக்கது.