(க.கமலநாதன்)

திருகோணமலை எண்ணெய் குதங்களை வியாபார செயற்பாடுகளுக்காக பயன்படுத்தும் திட்டங்கள் இறுதி வடிவம் பெற்றுள்ளன அவற்றை விரைவில் பகிரங்கமாக வெளியிடுவோம்.

இலங்கையின் கோரிக்கையின் பிரகாரம் திருகோணமலையில் மேற்படி செயற்பாடுகள் முன்னெடுக்கபடும் போது கூட்டாகச் செயற்பட இந்திய ஒப்புக்கொண்டுள்ளதென பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.