தமது சொந்தக் காணிகளை விடுவிக்குமாறு கோரி நாலாதிசைகளிலும் மக்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அந்தவகையில் பலாலி - மயிலிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இராணுவம் கையகப்படுத்தியுள்ள தமது சொந்தக்காணிகளை விடுவிக்குமாறு கோரி வலிகாமம் வடக்கு வளலாய் பகுதியில் இன்று போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் படம்பிடிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.