இலங்கை விமானப்படை ஆரம்பிக்கப்பட்டு 66 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு கொண்டாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நாளை முதல் கொண்டாடப்படவுள்ள 66ஆவது ஆண்டு விழாவானது, எதிர் வரும் 5ஆம் திகதி வரை கொண்டாடப்படுமென்பதோடு, தினமும் மலை 2.30 மணியளவில் விமானப்படை சாகசங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, உப விமானப்படை தளபதி சுதர்சன பத்திரன தெரிவித்துள்ளார்.

மேலும் 1951 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை விமானப்படை ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி அதன் ஆண்டு பூர்த்தி விழாவை கொண்டாடி வருகின்றது. 

இந்நிலையில் இவ்வருடத்திற்கான விமானப்படையில் பாராசூட் சாகசம், விமான சாகசங்கள் மற்றும் ஏனைய விமானப் படையிரரின் சாகச நிகழ்வுகள் விமானப்படை தளபதி கபில ஜெயம்பதி தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.