ஹொரணை மொரஹாஹேன பகுதியில் உள்ள பாழடைந்த தொழிற்சாலையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து இன்று அதிகாலை முதல் தேடுதல் நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.

களுத்­துறை வடக்கு சிறைச்­சா­லையில் இருந்து கடு­வலை நீதிவான் நீதி­மன்­றுக்கு பாதாள உலகக்  கோஷ்டி  சந்­தேக நபர்­களை ஏற்றி வந்த சிறைச்­சாலை பஸ் வண்டி மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட குழு, தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ளதாக கூறப்படும் இடத்தை சுற்றிவளைத்தே தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.