ஊடகவியலாளர்களுக்கு அனுப்பப்பட்ட மர்ம மின்னஞ்சல் : விசாரணை ஆரம்பம்

Published By: Robert

01 Mar, 2017 | 10:35 AM
image

யாழ்ப்­பாணம் ஊர்­கா­வற்­றுறை பிர­தே­சத்தில் இடம்­பெற்ற ஏழு மாத கர்ப்­பிணி பெண் மீதான படு­கொலை வழக்கு விசா­ர­ணையில் உண்­மை­யான குற்­ற­வாளி இவரே என ஒரு­வரை குறித்து அவர் தொடர்­பான தக­வல்கள் மின்னஞ்சல் மூலம் ஊட­க­வி­ய­லா­ளர்கள் சில­ருக்கு இனந்­தெ­ரி­யாத ஒரு­வரால் அனுப்­பப்­பட்­டமை தொடர்­பாக விசா­ரணை மேற்­கொள்­ளு­மாறு பொலி­ஸா­ருக்கு ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நீதி­மன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் உத்­த­ர­விட்­டுள்ளார்.

கடந்த ஜன­வரி மாதம் ஊர்­கா­வற்­றுறை கரம்பொன் எனும் இடத்தில் வீட்டில் தனித்­தி­ருந்த ஏழு மாத கர்ப்­பிணி பெண்­ணொ­ருவர் இனந்­தெ­ரி­யாத சிலரால் கொடூ­ர­மாக கொலை செய்­யப்­பட்­டி­ருந்தார். இத­னை­ய­டுத்து இச்சம்­பவம் தொடர்பில் இரு­வரை ஊர்­கா­வற்­றுறை பொலிஸார் கைது செய்­தி­ருந்­தனர். கைது செய்­யப்­பட்ட இரு­வரில் ஒரு­வ­ரது ஆடையில் இரத்தக்கறை காணப்­பட்­டி­ருந்­ததன் அடிப்­ப­டை­யி­லேயே இவர்கள் கைது செய்­யப்­பட்­டி­ருந்­த­தாக ஆரம்­பத்தில் பொலிஸ் தரப்பில் கூறப்­பட்­டி­ருந்­தது. 

இவ்­வா­றான நிலையில் இந்த கொலை தொடர்­பான வழக்கு விசா­ர­ணை­யா­னது ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நீதி­மன்றில் இடம்­பெற்று வரும் நிலையில் நேற்று முன்தினம் இடம்­பெற்ற வழக்கு விசா­ர­ணையின் போது பாதிக்­கப்­பட்­ட­வர்கள் சார்பில் சட்­டத்­த­ரணி சுகாஸ் ஆஜ­ரா­கி­யி­ருந்தார். இதன்­போது சந்­தே­க­ந­பர்கள் சார்பில் ஆஜ­ரா­கிய சட்­டத்­த­ரணி திருக்­குமார், குறித்த சந்­தே­க­ந­ப­ரது ஆடையில் இருந்த இரத்தக்கறை­யா­னது அவ­ருக்கு ஏற்­பட்ட விபத்­தொன்றால் அவ் இரத்த கறை அவ­ரது ஆடையில் ஒட்­டி­யி­ருந்­த­தா­கவும், அவர் அவ் விபத்தில் காய­ம­டைந்த போது வேல­ணையில் உள்ள வைத்­தி­ய­சாலை ஒன்றில் சிகிச்சை பெற்­றி­ருந்­த­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இதனை தொடர்ந்து பாதிக்­கப்­பட்­ட­வர்கள் சார்பில் ஆஜ­ரா­கிய சட்­டத்­த­ரணி, குறித்த கொலை சம்­பவம் இடம்­பெற்ற பின்னர் இக் கொலை சம்­ப­வத்தை மேற்­கொண்ட உண்­மை­யான குற்­ற­வாளி இவரே என முஸ்லிம் இனத்தை சேர்ந்த ஒரு­வ­ரது புகைப்­படம் மற்றும் அவர் தொடர்­பான தக­வல்­க­ளுடன் சில ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு மின்­னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருந்த விட­யத்தை நீதி­வா­னுக்கு தெரி­வித்­தி­ருந்தார். 

அத்­துடன் இவ் வழக்கின் விசா­ர­ணையை குற்றப் புல­னாய்வு பிரிவு பொலி­ஸா­ருக்கு பாரப்­ப­டுத்­து­வது தொடர்­பா­கவும் பரி­சீலனை செய்­யு­மாறு கோரி­யி­ருந்தார். சட்­டத்­த­ர­ணி­க­ளது வாதங்களையடுத்து நீதிவான், குறித்த சந்­தே­க­நபர் தாம் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்­ற­தாக கூறும் விடயம் தொடர்­பிலும், அவ் சிகிச்சை பெற்ற வைத்­தி­ய­சா­லை­யிலும் விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளு­மாறும், அதே­போன்று ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு அனுப்பப்­பட்ட மின்­னஞ்சல் தொடர்­பா­கவும் விசா­ரணை செய்­யு­மாறும் ஊர்­கா­வற்­றுறைப் பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­விட்­டி­ருந்தார். 

மேலும் வழக்கின் தற்போதைய நிலையில் இவ் வழக்கை குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும் குறிப்பிட்டதுடன் இவ் வழக்கின் சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37