மவுசாக்கலை நீர்தேக்கத்திற்கு நீர்வழங்கும் மஸ்கெலியா பெயார்லோன் ஆற்றில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞனின் சடலத்தை மீட்க நல்லத்தண்ணி கடற்படையினரை வரவலைத்துள்ளதாக மஸ்கெலியா பொலாஸார் தெரிவித்தனர்.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெயார்லோன் தோட்டத்தை சேர்ந்த திருமணமான 21 வயதுடைய கந்தையா கார்த்திக் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் நேற்று மாலை குடும்பதகராறு காரணமாக பொயார்லோன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியருகின்றது

பிரதேச மக்களும் பொலிஸாரும் சடலத்தை மீட்க முயற்சித்த போது ஆற்றின் ஆழம் காரணமாக சடலத்தை மீட்கமுடியாத நிலையில் நல்லத்தண்ணி கடற்படை அதிகாரிகளை வரவலைத்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார்தெரிவித்தனர்

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை தொடர்கின்றது.