கேப்பாபுலவு மக்களின் 42 ஏக்கர்  காணி நாளை விடுவிக்கப்படும் : அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தகவல்

28 Feb, 2017 | 07:51 PM
image

கேப்பாபுலவு, பிலக்குடியிருப்பில் 42 ஏக்கர் காணி நாளை விடுவிக்கப்படும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 28 நாட்களாக கேப்பாபுலவு, பிலக்குடியிருப்பு கிராம மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்கள்.

இதனைக் கருத்திற்கொண்டு கடந்த 14 ஆம் திகதி மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இவ் விடயம் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார். 

அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளிற்கும் படைத்தரப்பினருக்கும்  காணி விடுவிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு  ஜனாதிபதி அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார். 

பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்னதாக காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக அவ்வேளையில்; பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இவ் விடயம் தொடர்பாக எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நேற்று (பெப்ரவரி 27) ஜனாதிபதியோடு கலந்துரையாடியிருந்தார். 

இந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து பிலக்குடியிருப்பு கிராமத்தில் பொது மக்களது 42 ஏக்கர் காணி நாளை விடுவிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46