சிரியாவுக்கு ஏனைய மேற்குலக நாடுகள் ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆயுதங்களை வழங்கக் கூடாது. எனத் தீர்மானமொன்றை நிறைவேற்றுவதற்கு ஐ.நா சபை முடிவு செய்துள்ள நிலையில், இதற்கான வாக்கெடுப்பொன்றையும் நடத்த உத்தேசித்துள்ளது. இதனால் ரஷ்யா குறித்த வாக்கெடுப்பை தனது வீட்டோ அதிகாரம் மூலம் நிராகரிக்க முடிவு செய்துள்ளது.

சிரிய யுத்தத்தை வெற்றி கொள்வதற்காக மேற்கொள்ள்ளப்படும் இரசாயன தாக்குதல்கள் மற்றும் நவீன ஆயுத தாக்குதல்களால் அதிகளவான பொது மக்கள் இறப்பதாக கூறி, அந்நாட்டிற்கு வேறு நாடுகளிலிருந்து செல்லும் ஆயத்தங்களை தடை செய்வதற்கு ஐநா பாதுகாப்பு சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற உத்தேசித்துள்ள நிலையில், குறித்த குற்றச்சாற்றிற்கு போதிய ஆதாரமில்லை எனத் தெரிவித்து ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தவுள்ளது.

 

மேலும் சிரிய யுத்தத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா,ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இணைந்து நடத்திய பேச்சுவார்த்தைகளில் எவ்வித சமாதான புரிந்துணர்வுகளும் ஏற்படவில்லை. 

குறித்த போரில் சிரிய படைகள் நச்சு வாயுக்களை கொண்டு பொது மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக ஐநா எழுப்பிய குற்றாச்சாட்டுகளில், போதிய ஆதாரங்கள் இல்லை என ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ளது.

சிரிய ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையேயும் மற்றும் ஐஸ் தீவிரவாத அமைப்பினரினால் கடந்த 5 வருடங்களாக இடம்பெற்றுவரும் போரினால், இதுவரை சுமார் 3.2 இலட்சம் பேர் கொல்லப்பட்ட்டுள்ளதோடு, சுமார் 8 இலட்சம் பேர்வரை  இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.