வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் கீழுள்ள லங்கா அசோக் லேலண்ட் நிறுவனம் கடந்த ஆண்டு வரிக்கு பிந்திய இலாபமாக 165.7 மில்லியன் ரூபாவை ஈட்டி சாதனை நிலைநாட்டியுள்ளது என நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சிராஸ் மீராசாஹீப் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

லங்கா அசோக் லேலண்ட் நிறுவனம் 2016ம் ஆண்டு மொத்த வருமானமாக 7.63 பில்லியன் ரூபாவை  ஈட்டியிருந்தது.அமைச்சர் றிசாட் பதியூதீனின் சிறப்பான வழிகாட்டல் மூலம்  நிறுவனத்திற்கு தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்னர் பெறப்பட்ட சாதனை வருமானமாக தான் கருதுகின்றுன்.

அதுமட்டுமல்லாமல் இவ்வரும் கடந்த 2 மாதங்களின் பின்னர் 1692 புதிய வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நிறுவனத்தின் தலைவராக நான் நியமிக்கப்பட்டதன் காரணமாக  நிறுவன வரலாற்றில் வருட ஆரம்பத்தில் அதிகபடியான வாகன விற்பனையாகவும் இதனை கருத முடியும் என அவர் மேலும்  தெரிவித்தார்.