கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச்சென்ற பயணிகள் ரயில் தடம் புரண்டமையினால் மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

வட்டகொடை ரயில் நிலையப்பகுதியிலே இன்று பிற்பகல் 3 மணியளவில் தடம்புரண்டுள்ளது.

இதனால் வழமையான மலையக ரயில் போக்குவரத்து தடையேற்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.  குறித்த ரயிலில் வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் வருகைத்தந்ததுடன் பயணத்தை மேற்கொள்ளமுடியாது நிர்கதிக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.