யாழ். காரைநகர் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இளம் மீனவரொருவர் வலிப்பினால் கடலில் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 காரைநகர் களபூமியைச்  சேர்ந்த தங்கவேலு மோதிலால் வயது 33 என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு பலியானவராவார்.

 பலியான நபர்  நேற்று செவ்வாய்க்கிழமை மதியம்  கடலில் வலைகளை விரிக்கச்சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் அவரைத்தேடிச் சென்ற மனைவி கடற்கரையில் வீழ்ந்து கிடப்பதைக்கண்டு மீட்டு உடனடியாக யாழ். போதனா வைத்தியாலையில் அனுமதித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த மீனவருடைய உயிர் ஏற்கனவே பிரிந்ததினால் நீதிமன்ற பணிப்புரைக்கு அமைவாக மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டு சடலம் மனைவியிடம் கையளிக்கப்பட்டது.

இதேவைளை, குறித்த நபர் கடந்த பதினைந்து வருடமாக காக்கை வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் திருமணம் செய்து இரண்டு வருடங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.