மட்டக்களப்பில் 8 வது நாளாக சத்தியாகிரக போராட்டத்தில்  ஈடுபட்டுள்ள வேலையில்லா பட்டதாரிகள் இன்று 10 மணியளவில் சவப்பெட்டியுடன் பேரணியில் ஈடுபட்டுள்ளனர் .

பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரையில் போராடவுள்ள பட்டதாரிகள், இன்று பேரணியாக சென்று நகரத்தில் உள்ள 3 பாடசாலைகளுக்கு முன்பாக சென்று தங்களது பிரச்சனைகளை வெளிப்படுத்தியதுடன், அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

இந்த பட்டதாரிகள் விடயம் தொடர்பாக பல அரசியல்வாதிகள் நேரில் சென்று பார்வையிட்டும் இதுவரைக்கும்  எந்தவிதமான முடிவும் எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .