ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க பென்டகன் புதிய திட்டம்..!

Published By: Selva Loges

28 Feb, 2017 | 10:34 AM
image

அமெரிக்க பாதுகாப்பு  மையமான பென்டகன்,  ஐஎஸ் தீவிரவாதிகளை மொத்தமாக அழிப்பதற்கான புதிய திட்ட வரைபை, அந்நாட்டு ஜனாதிபதி வசஸ்தலமான வெள்ளைமாளிகைக்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  

ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிப்பதற்கு, பென்டகன் புதிய பொறிமுறைகளை செயற்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. சிரியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளில்,  பல பகுதிகளை ஆக்கிரமித்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள், அந்நாடுகளின் அரசிற்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் பல கொடூரமான தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு  வருகின்றது.

இந்நிலையில், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிக்க, புதுமையான திட்டங்களை நிறைவேற்ற உத்தரவிட்ட்டுள்ளதோடு,  அமெரிக்க பாதுகாப்புக்காக 54 பில்லியன் டொலரை ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

அதற்கமைய  பென்டகன், புது வித தாக்குதல் பொறிமுறை ஒன்றை உருவாக்கியுள்ளதோடு, நவீன ஆயுத பயன்பாடுகளுடனான பாரிய இராணுவத் தாக்குதல் ஒன்றை நடத்தும் சாத்தியப்பாடுகள் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47