மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும், திறைச்சேரி பிணை முறிகள் மோசடி  தொடர்பாக பொது எதிரணியினர், மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமியை சந்தித்துள்ளனர்.

குறித்த சந்திப்பு தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள, பொது எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளதாவது, பொது எதிரணியினர் சார்பாக  கூடிய விரைவில் மோசடி தொடர்பான விசாரணை முடிவுகளை ஏற்படுத்துவதற்கு  கோரியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் முன்னாள் ஜனாதிபதியிற்கும், குறித்த மோசடிக்கான வர்த்தமானி வெளியீடு தொடர்பாக கூறப்படும் பிணைப்பை தாம் மறுத்ததோடு, கூடிய விரைவில் உண்மைகளை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென கோரியதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மத்திய வங்கி ஆளுனரும், இன்னும் ஒருமாத காலத்திற்குள் விசாரணைகளை முடிப்பதற்கு எதிர்பார்ப்பதாக, தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.