கிளிநொச்சியில் எட்டாவது நாளாகவும் தொடரும் கவனயீர்ப்பு போராட்டம் 

Published By: Ponmalar

27 Feb, 2017 | 06:37 PM
image

கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று  எட்டாவது நாளாக தொடர்கிறது.

 இன்று திங்கள்  காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு எட்டாவது நாளாக தொடர்கிறது

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  விடயத்தில்  இனியும் காலம் தாமதிக்க  வேண்டாம் எனவும்  இலங்கை அரசுக்கு பொறுப்புக் கூறல் விடயத்தில் ஜ.நா. கால அவகாசம் வழங்கக்கூடாது என்றும்  காணாமல்  ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தொடர் கவனயீர்ப்பு போராட்டம்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தங்களுக்கு உறுதியான தீர்வு கிடைக்கும் வரைக்கும் கவனயீர்ப்பு போராட்டத்தை தொடரப் போவதாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்

 இன்று மாலை பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர்  போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடினார்கள். இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நிபந்தனையுடன் கால அவகாசம் வழங்கவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சம்மந்தன்  அவர்கள் விடுத்த அறிக்கைக்கு தங்களது கடும் கண்டனத்தை வெளிப்படுத்தினார்கள்.

 தங்களின் உணர்வுகளுக்கு  மாறாக குறித்த அறிக்கை  சமகாலத்தில் வெளியிடப்பட்டமை வருத்தமளிக்கிறது எனவும் சுட்டிக்காட்டினார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:41:00
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11