விசேட தேவையுடைய இராணுவ வீரர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் முடிவுக்குவந்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகளுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் மேற்கொண்ட கலந்துரையாடலினையடுத்து  குறித்த ஆர்ப்பாட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த பேச்சுவார்த்தையின் போது ஒரு மாதத்துக்குள் விசேட தேவையுடைய இராணுவ வீரர்களது கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

சில கோரிக்கைகளை முன்வைத்து விசேட தேவையுடைய இராணுவ வீரர்கள் புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.