மொனராகலை - கந்தகெடிய பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 10 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று (26) கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தேக நபர்கள் இன்று மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.