ஈழ மக்களுக்கு வலுச்சேர்க்க  பிரித்தானியாவில் அறவளிப்போர்:  6 அம்சக் கோரிக்கைகளுடன் காலவரையறையற்ற உண்ணாவிரதம்

05 Mar, 2017 | 12:03 PM
image

தமிழ் மக்களின் சமகால கோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கும் முகமாகவும் தமது சொந்த காணிகளை விடுவிக்கக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கேப்பாப்புலவு மக்களுக்கு வலுச்சேர்க்கும் வகையிலும் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களினால் காலவரையறையற்ற தொடர் அறவளி உண்ணாவிரதப் போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 34 ஆவது அமர்வு இன்று nஐனிவாவில் ஆரம்பமாகின்ற நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் 6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவின் வெஸ்மினிஸ்டர் நகரில் இவ்வறவழிப்போராட்டம் நடைபெற்று வருகின்றது.

1.எமது நிலம் எமக்கு வேண்டும். கேப்பாப்புலவு மக்களின் காணியை விட்டு இராணுவமே வெளியேறு.

2. சரணடைந்த போர் கைதிகள் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி வேண்டும்.

3. பயங்கரவாத சட்டத்தை நீக்கு. புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலைசெய்த போராளிகளையும் மக்களையும் மீண்டும் கைது செய்வதை நிறுத்து. 

4. சிறிலங்காவின் தமிழின அழிப்புக்குத் துணைபோன சிங்களப் பேரினவாதத் தலைவர்களையும் இராணுவத்தையும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்த சர்வதேச விசாரணை வேண்டும்.

5. பிரித்தானியா அரசாங்கமே தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு காலவகாசம் கொடுக்க துணை போகாதே.

6. வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு தமிழரின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஏன்ற ஆறு அம்சக்கோரிக்கைகளே முன்வைக்கப்பட்டுள்ளன.

மாலை 4.30 மணியளவில் ஆரம்பமான இவ்வறவளிப்போராட்டத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திர குமார் தொலைபேசி மூலமாக தொடக்க உரையினை நிகழ்த்தினார். 

அதில் அவர், இவ்வறவளிப் போராட்டம் எந்தவொரு நாட்டுக்கு எதிரானதோ அல்லது ஐக்கிய நாடுகள் சபைக்கெதிரான போராட்டமோ அல்ல. மாறாக ஐக்கியராச்சியமும் ஐ.நா. சபையும் எம் மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிபலிக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் வகையிலான போராட்டம் என குறிப்பிட்டார். 

அதனைத்தொடர்ந்து மாணவர் பேரவையின் முன்னால் தலைவர் பொன். சத்தியசீலன் பொதுச்சுடர் ஏற்றி போராட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசலிங்கம் திருக்குமரனுடன் இணைந்து சுப்பிரமணியம் அருணகுமார், பிராட்ஹரிஸ், நாகேந்திரன் சிந்துஐன்இ கோவிந்தப்பிள்ளை லிங்கேஸ்வரன், பெரியசாமி காண்டீபன், தர்மராஜா கெங்காதரன் ஆகிய ஆறு செயற்பாட்டாளர்கள் நேற்றிலிருந்து காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 34 ஆவது அமர்வு இன்று திங்கட்கிழமை nஐனிவாவில் ஆரம்பமாகின்ற நிலையில் இலங்கை தொடர்பில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தொடர்ச்சியாக நம்பகத்தன்மையான புதிய தீர்மானத்தைக் கொண்டு வருமாறும் அதில் ஐ.நா. தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான கால அட்டவணையை உள்ளடக்குமாறும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளிடம் சர்வNதுச மனித உரிமை கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55