ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறியே தேர்தலில் போட்டியிடும் : துமிந்த திசாநாயக

Published By: Selva Loges

26 Feb, 2017 | 05:56 PM
image

(ஆர்.யசி)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பொது எதிரணியும் இணைந்து செயற்படுவதே கட்சியின் பலமாகும். தனிக் கட்சி ஆட்சியை அமைக்கவே தயாராகின்றோம். எமது வேலை முடிந்ததும் தேசிய அரசை விட்டு வெளியேறியே தேர்தலில் போட்டியிடும். என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திசாநாயக தெரிவித்தார். 

பொது எதிரணியுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுக் கூட்டமும் செயற்குழுக் கூட்டமும் மார்ச் மாதம் 2ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

எதிர்வரும் தேர்தல்களில் பொது எதிரணி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டுமாயின் தேசிய அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் வெளியேற வேண்டும். என பொது எதிரணி உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளமை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாட்டை வினவிய போதே பொதுச்செயலாளர் துமிந்த திசாநாயக மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறுகையில், 

ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன உத்தரவிடும் நிலையில் உடனடியாக நாம் தேசிய அரசை விட்டு வெளியேறி கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக உள்ளோம்.

அதேபோல் இந்த அரசாங்கம் செய்யவேண்டிய வேலைத்திட்டங்கள் சில உள்ளன. ஜனாதிபதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும். ஆகவே நாம் கொடுத்த வாக்குறுதிகளுக்கு அமைய வேலைகள் அனைத்தும் முடிந்தவுடன் நாம் தேசிய அரசாங்கத்தை விட்டு வெளியேறுவோமென தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15