பணி செய்யும் பெண்மணிகளின் கவனத்திற்கு..

Published By: Robert

26 Feb, 2017 | 01:32 PM
image

எம்முடைய பல குடும்பங்களில் தற்போது குடும்பத்தலைவர் மற்றும் இல்லத்தரசி என இருவரும் அலுவலகத்திற்கு சென்று பணி செய்து பொருள் ஈட்டுகிறார்கள். ஒரு சில குடும்பங்களில் இதுவே போதாமல் இருக்கிறது என்பது வேறு விடயம். தற்போது இவ்வாறு பணிக்கு செல்லும் பெண்கள் தாங்கள் பணி செய்யுமிடங்களில் சந்திக்கும் பணி சார்ந்த சவால்களால் அவர்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகிறது என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

பணிக்கு செல்லும் பெண்களில் 40 சதவீதத்தினர், பணியிட சூழல் காரணமாக அதிக மன அழுத்தம், மன உளைச்சல் மற்றும் மனம் சார்ந்த சிக்கலுக்கு ஆளாகிறார்கள். இதனால் அவர்களின் இதயம் பாதிக்கப்படுகிறது. பக்கவாத பாதிப்பும் ஏற்படுகிறது என்று கண்டறிந்திருக்கிறது அண்மைய ஆய்வு. அதிலும் பணியிடங்களில் ஆண்களுக்கு நிகராக முடிவு எடுக்கும் இடங்களில் இருக்கும் பெண்கள், எப்போதும் விழிப்புணர்வுடன் பணியாற்றவேண்டியதிருப்பதால் இவர்களால் மனதை இயல்பாக வைத்து கொள்ள முடிவதில்லை. அத்துடன் மனதை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளவும் முடிவதில்லை. இதனால் முதலில் தூக்கமின்மைக்கு ஆளாகிறார்கள். அதனைத் தொடர்ந்து சத்தான சரிவிகித உணவையும் இவர்களால் எடுத்துக் கொள்ள முடிவதில்லை. மனதை இயல்பாகவைத்துக் கொள்ள உதவும் யோகா, தியானம் போன்றவற்றில் முழுமையாகவும், தொடர்ச்சியாகவும் இவர்களால் ஈடுபட முடிவதில்லை. அதிலும் திருமணத்திற்கு முன்னர் பணி செய்துவிட்டு வேறு சில காரணங்களால் பணியிலிருந்து விலகியிருப்பார்கள். இவர்கள் மீண்டும் சவாலான பணியில் சேரவேண்டிய சூழல் வந்தால் மனதளவில் சோர்ந்து போகிறார்கள். அதே போல் சவாலான பணியில் இருக்கும் பெண்கள், பணியிலிருந்து விலகிவிட்டால் அவர்களின் உடல் எடை அதிகரித்துவிடுகிறது. அவர்களின் இதயத்தில் இருக்கும் இரத்த குழாய்களில் படியும் கொழுப்புகளின் அளவும் அதிகரித்துவிடுகிறது. இவையனைத்தும் பெண்கள் மனம் சோர்வாக இருக்கும் போது அவை எதிர்ப்பதற்கு உற்பத்தியாகும் ஹோர்மோன்களின் எதிர்விளைவு என்றும் கண்டறிந்திருக்கிறார்கள்.

இதனால் மருத்துவர்கள் பெண்களுக்கு அவர்களின் மனதைக் கட்டுக்குள் வைத்திருக்க ஒரு சில விடயங்களைப் பற்றி அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

உங்களுடைய வாழ்க்கையில் பணி நிமித்தமான காரியங்களின் ஊடுருவலை ஒரு எல்லைக்குள் வரையறுத்துக் கொள்ளவேண்டும். relaxation techniques என்றழைக்கப்படும் தியானம் மற்றும் ஆழ்ந்து சுவாசித்தலில் தொடர்ச்சியாக பயிற்சி எடுக்கவேண்டும். வீட்டில் இருக்கும் போது அலுவலக பணிகள் செய்யவேண்டிய சூழல் உருவானால், முதலில் அதற்கான நேரத்தை திட்டமிட்டு, அதன் படி செயல்படவேண்டும். கடந்து போன விடயங்களைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்திக் கொண்டு, உங்களின் நாளாந்த உடற்பயிற்சிகளை எக்காரணம் கொண்டு இடைநிறுத்தம் இல்லாமல் தொடரவேண்டும். இது போன்ற சில விடயங்களை கவனத்தில் கொண்டால் உங்களுக்கு ஆரோக்கிய இழப்பு ஏற்படாது. அத்துடன் சாதிக்கவும் முடியும்

டொக்டர் ஆறுமுகம்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04