திருகோணமலை மூதூரிலிருந்து கிண்ணியாவுக்கு  சட்டவிரோதமாக சிப்பிகளை கொண்டு சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பாரவூர்தி ஒன்றில் 150 மூட்டைகளில் சிப்பிகள் கொண்டு சென்றுள்ளார்.

இது தொடர்பில் கிண்ணியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, குறித்த பாரவூர்தியை சோதனையிட்ட பொலிஸார், சிப்பிகளை கைப்பற்றியுள்ளனர்.