இந்தியா மற்றும் ஆஸி மோதும் முதல் டெஸ்ட் போட்டி பூனேவில் இடம்பெற்றுவருகின்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸி  260 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி ஆஸியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல், 105 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி 285 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்துள்ளது.

இதனடிப்படையில் ஆஸி அணி 440 ஓட்டங்களால் முன்னிலைவகிக்கின்றது.

ஆஸி அணி சார்பில் அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 109 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்நிலையில்  இந்திய அணி வெற்றிபெற வேண்டுமாயின் 441 ஓட்டங்களை பெறவேண்டும்.