லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் வளாகத்தில் தனது முதலாவது மாதிரி சேகரிப்பு அலகை லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் டயக்னோஸ்டிக்ஸ் அண்மையில் அங்குரார்ப்பணம் செய்திருந்தது. 

இலங்கையில் காணப்படும் எந்தவொரு வைத்தியசாலையிலும் காணப்படாத, இந்த மாதிரி சேகரிப்பு அலகு வசதியின் மூலமாக, சௌகர்யமாகவும், இலகுவாகவும், துரிதமாகவும் வாடிக்கையாளர்களுக்கு ஆய்வுகூட பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

லங்கா ஹொஸ்பிட்டல்ஸின் தலைவர் சரத் பரணவிதான கருத்து தெரிவிக்கையில், 

“எமது முதலாவது மாதிரி சேகரிப்பு அலகை நிறுவியுள்ளதையிட்டு நாம் மிகவும் பெருமையடைகிறோம். இதன் மூலமாக, துரித கதியில், பரிசோதனை அறிக்கைகளை வழங்கக்கூடியதாக இருக்கும் என்பதுடன், சிகிச்சை அணியினர் மற்றும் வைத்திய நிபுணர்களிடையே சிறந்த தொடர்பை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. 

நோயாளர்களை அடிப்படையாகக் கொண்ட பராமரிப்பு என்பது தொடர்பில் நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்புக்கமைவாக இது அமைந்துள்ளது” என்றார்.

வைத்தியசாலையின் பிரதான கட்டிடத் தொகுதிக்கு அப்பால் மாதிரி சேகரிப்பு நிலையத்தை நிறுவியுள்ளதன் நோக்கம் என்பது, எமது வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற சௌகர்யத்தை வழங்குவதை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது. 

புதிய அலகுக்கு விஜயம் செய்யும் வாடிக்கையாளர்கள், வைத்தியசாலையின் கட்டிடத்தினூடாக பிரவேசிக்க வேண்டிய அவசியம் இல்லை, போதியளவு வாகனத் தரிப்பிட வசதிகள் காணப்படுவதுடன், நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய தேவையும் தவிர்க்கப்படுகிறது. 

“வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற சேவைகளை வழங்குவது குறித்து லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் டயக்னோஸ்டிக்ஸ் பெருமை கொள்கிறது” என பரணவிதான மேலும் குறிப்பிட்டார்.

மேலும், புத்தாக்கம் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நோயாளர்களுக்கு சௌகர்யத்தை வழங்குவதுடன், இணையத்தளத்தினூடாக பரிசோதனை அறிக்கைகளை பெற்றுக் கொள்ளக்கூடிய வசதிகளையும் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் டயக்னோஸ்டிக்ஸ் வழங்குகிறது.

நோயாளர்கள் மற்றும் குடும்பத்தாரிடையே சௌகர்யம் மற்றும் தொடர்பாடல் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் இந்த சேவை அமைந்துள்ளதுடன், வைத்தியசாலைக்கு பரிசோதனை அறிக்கைகளை பெற்றுக் கொள்ள மீண்டும் விஜயம் செய்ய வேண்டிய தேவையையும் இல்லாமல் செய்துள்ளது. 

நோயாளர்கள் தமது மாதிரிகளை சமர்ப்பித்தவுடன் அவர்களுக்கு SMS ஊடாக உறுதிப்படுத்தப்பட்ட அறிவித்தல் வழங்கப்படும். பரிசோதனை அறிக்கை தயாரானவுடன் நோயாளர்களுக்கு மற்றுமொரு SMS அறிவித்தல் அனுப்பப்படும். இறுதியாக அனுப்பப்படும் அறிவித்தலில், லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் டயக்னோஸ்டிக்ஸ் இணையத்தளத்தில் பிரவேசிப்பதற்கு அவசியமான User ID மற்றும் Password ஆகியன அடங்கியிருக்கும். இதன் மூலமாக குறித்த பரிசோதனை அறிக்கைகளை லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் டயக்னோஸ்டிக்ஸ் இணையத்தளத்தில் நோயாளர்களுக்கு பார்வையிட முடியும். 

வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் டயக்னோஸ்டிக்ஸ் நெகிழ்ச்சித் தன்மை, ஒப்பற்ற தரம் மற்றும் மிகச்சிறந்த சேவை ஆகியவற்றுடன் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கிறது. சர்வதேச தரங்களுக்கமைய செயலாற்றுவது என்பது லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் டயக்னோஸ்டிக்ஸ் பெருமைக்கு மேலும் சான்றாக அமைந்துள்ளது.

லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் டயக்னோஸ்டிக்ஸ் பணிப்பாளர் பேராசிரியர் திலானி லொகுஹெட்டி  “சர்வதேச தரங்களை பின்பற்றுகின்றமைக்காக லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் டயக்னோஸ்டிக்ஸ் புகழ்பெற்றுத் திகழ்கிறது. ISO:15189 தரச்சான்றைப் பெற்ற இலங்கையின் முதலாவது வைத்தியசாலை ஆய்வுகூடமாக அமைந்துள்ளது. 

தனது வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு உயர் தரம் மற்றும் துறையில் காணப்படும் சிறந்த செயற்பாடுகளை வழங்குவதை லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் டயக்னோஸ்டிக்ஸ் உறுதி செய்கிறது” என்றார்.

ISO தரச் சான்றளிப்பு என்பது சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தர நியமங்களாக அமைந்துள்ளதுடன், தரம் மற்றும் மருத்துவ ஆய்வுகூடங்களின் வினைத்திறன் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பரந்தளவு ஆய்வுகூட பரிசோதனைகளை வழங்கும் தேசத்தின் முதலாவது ஆய்வுகூட பரிசோதனை நிலையமாக லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் டயக்னோஸ்டிக்ஸ் அமைந்துள்ளது. இதில் 1050 க்கும் அதிகமான பரிசோதனைகள் உள்ளடங்கியுள்ளன. 

இதில் விசேடத்துவம் வாய்ந்த 75 பரிசோதனைகள் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் டயக்னோஸ்டிக்ஸ் ஆய்வுகூடத்தில் மட்டும் வழங்கப்படுகின்றமை விசேட அம்சமாகும். நவீன வசதிகளுடனான பரிசோதனை வசதிகளைக் கொண்டுள்ளதுடன், மேம்படுத்தப்பட்ட உள்ளங்கங்கள் மற்றும் சாதனங்கள் போன்றனவும் காணப்படுகின்றன. 

நவீன பரிசோதனை கட்டமைப்புகளுக்கமைய சகல ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. முழு நேரமாக பணியாற்றும் ஆறு ஆய்வுகூட ஆலோசகர்களின் மேற்பார்வை வழங்கப்படும் இலங்கையின் ஒரே தனியார் ஆய்வுகூடமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், சிறந்த அணியினர் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் ஆகியோர் சிறந்த தரக்கட்டுப்பாடுகளுக்கமையவும், SOP கள் மற்றும் protocol களுக்கமைய சேவைகளை வழங்கி வருகின்றனர்.

நோயாளர்களுக்கான சிகிச்சை அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், உலகத் தரம், புத்தாக்கமான தீர்வுகள் ஆகியன பின்பற்றப்படுகின்றமைக்காக, அமெரிக்காவின் நோய்அறிகுறி ஆய்வு வல்லுநர் (Pathologists) கல்வியகத்திடமிருந்து (CAP) சான்றை பெற்றுக் கொள்ளும் செயற்பாடுகளை லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் டயக்னோஸ்டிக்ஸ் முன்னெடுத்த வண்ணமுள்ளது. இந்த சான்று 2016 செப்டெம்பர் மாதமளவில் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 

“நோயாளர் சிகிச்சை அனுபவத்தை மேம்படுத்த பின்பற்றப்படும் உலகத் தரம், புத்தாக்கமான தீர்வுகள் ஆகியவற்றுக்கு கிடைக்கும் அங்கீகாரமாக CAP சான்று அமைந்துள்ளது” என பேராசிரியர் லொகுஹெட்டி தெரிவித்தார். 

ஆய்வுகூட சான்றளிப்பு முறைகளில் CAP என்பது தங்க நியமமாக உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. சபை-சான்றளிக்கப்பட்ட நோய்அறிகுறி ஆய்வு வல்லுநர்களுக்காக விசேடமாக அமைந்த உலகின் மாபெரும் சம்மேளனமாக இது அமைந்துள்ளதுடன், ஆய்வுகூட தர உறுதிச் செயற்பாடுகளில் உலகளாவிய ரீதியில் முன்னோடியாகவும் அமைந்துள்ளது. CAP இனால், தங்கியிருக்கக்கூடிய, உயர் தரம் வாய்ந்த மற்றும் செலவீனம் குறைந்த நோயாளர் பராமரிப்பு உறுதி செய்யப்படுகிறது.  

உயர் தர ஆய்வுகூட சேவைகளை நாடும் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கி வரும் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் டயக்னோஸ்டிக்ஸ், 600 க்கும் அதிகமான மாதிரி சேகரிப்பு நிலையங்களை நாடு முழுவதும் கொண்டுள்ளது. எதிர்வரும் சில மாத காலப்பகுதியில் கண்டி மற்றும் கராபிட்டிய பகுதிகளில் இரு புதிய ஆய்வுகூடங்களை நிறுவவும் திட்டமிட்டுள்ளது. 

லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் டயக்னோஸ்டிக்ஸின் வெற்றிகரமான செயற்பாடு என்பது, வாடிக்கையாளர்களுக்கு இணையற்ற உயர்ந்த தரத்துடனான சேவைகளை வழங்கும், நாட்டில் காணப்படும் சிறந்த ஆய்வுகூடமாக திகழ்வது எனும் நோக்கத்துக்கமைய முன்;னெடுக்கப்படுகிறது. தனது புதிய மாதிரி சேகரிப்பு நிலையத்தின் அங்குரார்ப்பணத்தை கொண்டாடும் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் டயக்னோஸ்டிக்ஸ், இந்த புதிய நிலையத்தின் சேவைகளை பெற்றுக் கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு ஜனவரி மாதம் முழுவதும் 25 சதவீத விலைக்கழிவை வழங்க முன்வந்துள்ளது. 

2015 செப்டெம்பர் 01ஆம் திகதிக்கு பின்னர் நாட்டிலுள்ள எந்தவொரு ஆய்வுகூடத்திலிருந்து பெற்றுக் கொண்ட ஆய்வுகூட அறிக்கையை சமர்ப்பித்து இந்த சலுகையை பெற்றுக் கொள்ளலாம்.