ஹங்வெல்ல - ஜல்தர பகுதியில் துப்பாக்கியொன்றை தன் கைவசம் வைத்திருந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் 29 வயதான ரனால பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞரை இன்று ஹங்வெல்ல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.