சீனாவின் நான்ச்சாங் நகரில் உள்ள அதிசொகுசு ஹோட்டல் ஒன்றில் பயங்கர தீ பரவியுள்ளதாகத் தெரியவருகிறது. இன்று (25) அதிகாலை மூண்ட இந்தத் தீயில் மூவர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். பதினான்கு பேர் கடும் காயங்களுடன் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் கட்டிடத்தினுள் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

எச்.என்.ஏ. ப்ளாட்டினம் மிக்ஸ் என்ற இந்த ஹோட்டலின் பல மாடிகளில் இருந்து கடும் தீச்சுவாலைகள் பலவும் காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

தீ பரவிய செய்தியை அறிந்த சில நிமிடங்களில் அங்கு வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர்.