மேல் மாகாண சபை உறுப்பினர் மெரில் பெரேராவின் தந்தையின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக தனது மகன் நாமல் ராஜபக்ஷடன் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, உடலுக்கு அருகில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது

மேல் மாகாண சபை உறுப்பினர் மெரில் பெரேராவிக் தந்தையின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகிய இருவரும் சென்றுள்ளனர்.

எனினும் தான் சக்தி வாய்ந்த தாயத்து ஒன்று கட்டியிருந்தமையினால் உடலுக்கு அருகில் செல்ல மறுத்த மஹிந்த, இறுதி அஞ்சலி செலுத்துவதனை புறக்கணித்துள்ளார்.

பின்னர் நாமல் ராஜபக்ச மாத்திரம் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வீழ்ச்சியடைந்து வரும் அரசியல் ஈர்ப்பை பாதுகாப்பதற்காகவே சக்தி வாய்ந்த மந்திர தகடுகள் பொருத்திய தாயத்தை மஹிந்த கட்டியுள்ளார்.

இதன் காரணமாக மரண சடங்குகளில் கலந்துக் கொள்ள வேண்டாம் என மஹிந்தவின் சோதிடர்கள் மற்றும் சோதிடத்திற்கு தொடர்புடையவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஜோதிடத்தை நம்பிய மஹிந்த ராஜபக்ஷ தனது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னரே ஜனாதிபதி தேர்தலை நடத்தி தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.