பெயர்களைப் பட்டியலிட்டுக் கொன்று வரும் ஐ.எஸ்.; எகிப்தில் இருந்து கிறிஸ்தவர்கள் வெளியேற்றம்

Published By: Devika

25 Feb, 2017 | 10:16 AM
image

கிறிஸ்தவ சமூகத்தினர் மீதான ஐ.எஸ்.ஸின் தாக்குதல்களையடுத்து எகிப்தின் வடக்கு சினாய் மாகாண கிறிஸ்தவக் குடும்பங்கள் இடம்பெயர ஆரம்பித்துள்ளனர். கடந்த மூன்று வாரங்களுக்குள் ஏழு கிறிஸ்தவர்கள் இலக்கு வைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்தே இந்த முடிவுக்கு கிறிஸ்தவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

சுயெஸ் கால்வாய் நகரான இஸ்மைலியாவில் உள்ள இவாஞ்சலிக்கல் தேவாலயத்தில் வழிபாடு நடத்தும் சுமார் 160 கிறிஸ்தவக் குடும்பங்களில் இதுவரை 100 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும், கல்வி கற்பதற்காக அங்கு தங்கியிருந்த 200 கிறிஸ்தவ மாணவர்களும் அவர்களுடனேயே வெளியேறிவிட்டதாக தேவாலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இருபத்தைந்து கிறிஸ்தவக் குடும்பங்கள் நேற்று தமது மூட்டை முடிச்சுக்களுடன் வெளியேறினர்.

அப்பகுதியில் வாழும் கிறிஸ்தவர்களின் பெயர்களை இணையதளம் வாயிலாகவும் சுவரொட்டிகளாகவும் ஒட்டி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள், அந்தப் பட்டியலின் படி பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்து வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13