(எம்.சி.நஜிமுதீன்)

சைட்டம் நிறுவனத்தின் நிறைவேற்றதிகாரி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அரசாங்கம் அமைதிகாக்கிறது. எனினும் குறித்த சம்பவத்தின் பின்னணியை அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப் பெரும தெரிவித்தார்.

சைட்டம் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்றதிகாரி சமீர சேனாரத்ன மீதான துப்பாக்கிச்சுட்டு சம்பவத்தின் பின்னணியை கண்டறிய வேண்டும். அப்பின்னணி இனங்காணப்படும்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களின் சூத்திரத்தையும் கண்டுகொள்ள முடியும்.

நல்லாட்சி அரசாங்கமானது பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு முன்வைக்காமல் காலம் தாழ்த்துகிறது. காலம் தாழ்த்துவதன் மூலம் அப்பிரச்சினைகளை இலகுவில் தீர்த்துக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கிறது. ஆகவே எந்தவொரு பிரச்சினைக்கும் நேரடியாக உரிய நேரத்தில் தீர்வு முன்வைப்பதாக இல்லை.

மேலும் சைட்டம் நிறுவனத்தின் நிறைவேற்றதிகாரி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அரசாங்கம் அமைதி காக்கிறது. எனினும் குறித்த சம்பவத்தின் பின்னணியை அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும்.

மேலும் சைட்டம் விவகாரத்தை முன்னைய ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினை எனக்கூறி அரசாங்கம் அமைதியாக இருந்துவிட முடியாது. 

சைட்டம் விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப் பெரும மேற்கண்டவாறு தெரிவித்தார்.