மக்களின் காணிகளிலிருந்து வெளியேறுகிறது இராணுவம்

Published By: Priyatharshan

24 Feb, 2017 | 02:28 PM
image

கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் மக்களின்  காணிகளிலிருந்து இராணுவத்தினர் தற்போது வெளியேறி வருகின்ற நிலையில், காணிகளை துப்புரவு செய்யும் நோக்கில் மக்கள் இராணுவத்தின் முகாம் அமைந்திருந்த பகுதிகளுக்குள் சென்று கொண்டிருப்பதாக எமது  செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

 

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் இராணுவ முகாம் அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 9 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்று ஐந்தாவது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது.

அதன்போது மக்களின் காணிகளை பிரதேச செயலாளர் அடையாளப்படுத்தியதன் பின்னர் தாம் வெளியேறுவதாக இராணுவத்தினர் உறுதியளித்திருந்தனர். 

அதன்படி, நேற்றைய தினம் மக்கள் தமது காணிகளை பிரதேச செயலாளருக்கு அடையாளம் காட்டியிருந்த நிலையில் இன்று ஐந்தாவது நாளாகவும் தமது போராட்டத்தை தொடர்ந்து வந்த நிலையிலேயே இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் மக்கள் முகாம் அமைந்துள்ள பகுதிகளுக்குள் சென்று காணிகளை சுத்தப்படுத்தவும் இராணுவத்தினர் அனுமதியளித்துள்ளனர். எனினும் குறித்த பகுதியைவிட்டு இராணுவம் முழுமையாக வெளியேறும்வரை ஊடகவியலாளர்கள் அப்பகுதிக்கு அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33