இந்தியா மற்றும் ஆஸி மோதும் முதல் டெஸ்ட் போட்டி பூனேவில் இடம்பெற்றுவருகின்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸி கடும் சவால்களுக்கு மத்தியில் 260 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆஸி அணி சார்பில் ரென்சோவ் 68 ஓட்டங்களையும், ஸ்டார்க் 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் உமேஷ் யாதவ் 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி ஆஸியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல், 105 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி சார்பில் சற்று நிலைத்தாடிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ராஹுல் அரைச்சதத்தை கடந்து 64 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்துள்ளனர்.

ஆஸி அணியின் பந்துவீச்சில் ஓ கீபி 6 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் ஆஸி அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பிக்கவுள்ளது.