அடுத்த பொலிஸ்  மா அதிபர் யார்?

Published By: MD.Lucias

06 Jan, 2016 | 08:09 AM
image

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி வெற்றிடமாகவுள்ள பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பொலிஸ்  யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான எஸ்.எம்.விக்ரமசிங்க, பூஜித்த ஜயசுந்தர மற்றும் சி.டி.விக்ரமரத்ன ஆகிய மூவரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.    

எதிர்வரும் ஏப்ரல் 12 ஆம் திகதி தற்போதைய பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனுக்கு 60 வயது பூர்த்தியாகும் நிலையில், 19 ஆவது அரசியல் திருத்தத்துக்கு அமைய பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து அவர் ஓய்வு பெற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந் நிலையிலேயே பொலிஸ் திணைக்களத்தினுள் தற்போது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களிடையே பொலிஸ் மா அதிபர்  பதவிக்கு யார் நியமிக்கப்படுவார் என்று  எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.  

தற்போதைய பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனுக்கு அடுத்த படியாக சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் உள்ளவர் தேர்தல்கள் மற்றும் நிர்வாகம் தொடர்பிலான  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன ஆவார். எனினும் அவர் 60 வயதை பூர்த்தி செய்துள்ள நிலையில் விஷேட அமைச்சரவை அனுமதியின் பிரகாரமே தற்போது சேவை செய்துவருகின்றார். அந்த பதவி நீடிப்பும் எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. எனவே பொலிஸ் மா அதிபர் இலங்ககோன் ஓய்வு பெற்ற பின்னர் இரு மாதங்களுக்கு காமினி நவரத்ன பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படமாட்டார் என  தெரிவிக்கப்படுகின்றது.  

 அண்மைய காலங்களில் பொலிஸ் மா அதிபர் வெளி நாடு சென்ற போது பதில் பொலிஸ் மா அதிபர் பதவியில்  பிரபுக்கள் பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டப்படுகின்றது. அத்துடன் பொலிஸ் மா அதிபருடன் எஸ்.எம். விக்ரமசிங்க அண்மையில் வெளி நாட்டு பயணம் ஒன்றை முன்னெடுத்தபோது   பதில்  பொலிஸ் மா அதிபராக சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர நியமிக்கப்பட்டிருந்தார்.

எஸ்.எம்.விக்ரமசிங்க மற்றும் பூஜித்த ஜயசுந்தர ஆகிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் 1985 மே 20 ஆம் திகதி உதவி பொலிஸ் அத்தியட்சர்களாக பொலிஸ் சேவையில் இணைந்துகொண்டவர்கள்.   இதேவேளை சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சீ.டி.விக்ரமரத்னவும் அடுத்த பொலிஸ் மா அதிபர் பதவியை பெறுகின்றவர்கள் என எதிர்பார்க்கப்படுகின்றவர்களில்   முன்னிலையில் உள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47