வடக்கு மற்றும்  கிழக்கு மாகா­ணங்­­ளி­லி­ருந்து முழு­மை­யாக இரா­ணு­வத்தை அகற்­றக்­கோ­ரு­­தா­னது சமூ­கங்­­ளுக்கு இடையில் நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­­தற்கு தடை­யாக அமைந்­து­விடும் என்று  சுதந்­திரக் கட்­சியின் பேச்­சா­ளரும்  இரா­ஜாங்க அமைச்­­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார்.

சிறு­பான்மை மக்­களின் விவ­காரம் குறித்த  ஐக்­கிய நாடு­களின் விசேட நிபுணர் ரீட்டா ஐசாக்கின் இலங்கை குறித்த அறிக்­கையில் உள்ள அதி­­மான விட­யங்­களை வர­வேற்­கின்றோம்.மாறாக பொது மக்­களின் காணி­களை விடு­வித்தல் சிறு­பான்மை மக்­களின் உரி­மை­களை பாது­காத்தல் உள்­ளிட்ட ரீட்டா ஐசாக்கின் பரிந்­து­ரைகள் வர­வேற்­கத்­தக்­­வை­யாகும் என்றும் டிலான் பெரேரா சுட்­டிக்­காட்­டினார்.

சிறு­பான்மை மக்­களின் விவ­காரம் குறித்த  ஐக்­கிய நாடு­களின் விசேட நிபுணர் ரீட்டா ஐசாக் இலங்கை தொடர்­பாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வைக்கு சமர்ப்­பித்­துள்ள அறிக்­கையில்  உள்­­டக்­கப்­பட்­டுள்ள பரிந்­து­ரைகள் தொடர்பில் விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் இது தொடர்பில் குறிப்­பி­டு­கையில்,

ஒரு விட­யத்தை தவிர சிறு­பான்மை மக்­களின் விவ­காரம் குறித்த  ஐக்­கிய நாடு­களின் விசேட நிபுணர் ரீட்டா ஐசாக் முன்­வைத்­துள்ள பரிந்­து­ரைகள்  நியா­­மா­­வை­யாகும்.

பொது மக்­­ளிடம் இருந்து அப­­ரிக்­கப்­பட்ட காணிகள் மீள்­­ழங்­கப்­­­வேண்டும். அவற்றை மறுக்க முடி­யாது. வழங்­கப்­பட முடி­யாத காணிகள் இருப்பின் அவற்­றுக்கு நஷ்­­ஈடு வழங்­­வேண்டும். இது மக்­களின் உரி­மை­யாகும். அதனை மறுக்க முடி­யாது.

அது மட்­டு­மன்றி மக்­களின் உரி­மை­களை பாது­காத்தல் மிகவும் முக்­கி­­மா­­வை­யாகும். அதற்கும் நட­­டிக்கை எடுக்­­வேண்டும். சிறு­பான்மை மக்கள் தாம் பாது­காப்­பான முறையில் இந்த நாட்டில் வாழ்­­தாக உண­­வேண்டும். அதற்­கான ஏற்­பா­டு­களை அர­சாங்கம் உறு­தி­ப்ப­டுத்­­வேண்டும்.

மேலும் சமூ­கங்­­ளுக்கு இடையில் நம்­பிக்கை கட்­டி­யெ­ழுப்­பப்­­­வேண்டும் என்றும் .நா. நிபுணர் தெரி­வித்­துள்­ளமை வர­வேற்­கத்­தக்­­தாகும்.

ஆனால் ஐக்­கிய நாடுகள் விசேட நிபு­ணரின் அறிக்­கையில்  உள்­­டங்­கி­யுள்ள பரிந்­து­ரை­களில் ஒரு  விட­யத்தை என்னால் முழு­மை­யாக ஏற்­றுக்­கொள்ள முடி­யாதுஅதா­வது வடக்கு, கிழக்கு மாகா­ணங்­­ளி­லி­ருந்து முழு­மை­யாக இரா­ணு­வத்தை அகற்­றக்­கோ­ரு­­தா­னது சமூ­கங்­­ளுக்கு இடையில் நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­­தற்கு தடை­யாக அமைந்­து­விடும்.

வடக்கு, கிழக்கு மாகா­ணங்­­ளி­லி­ருந்து இரா­ணு­வத்தை அகற்­றினால் தென்­னி­லங்கை மக்கள் நம்­பிக்கை இழந்­து­வி­டு­­துடன் சந்­தே­கக்­கண்­கொண்டு பார்க்க ஆரம்­பித்­து­வி­டு­வார்கள்.

எனவே இது  ரீட்டா ஐசாக்கின் முக்­கிய பரிந்­து­ரை­யான சமூ­கங்­­ளுக்கு இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்பும் செயற்பாட்டுக்கு தடையாக அமைந்துவிடும்.

100 வீதமாக இராணுவ முகாம்களை வடக்கிலிருந்து அகற்றினால் இந்த நிலைமை உருவாகும். அந்த சந்தர்ப்பத்தில் நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புதல் ஆகிய  விடயங்கள் கேள்விக்குறியாகிவிடும் என்றார்.