இலங்கையில் இருந்து மிகவும் சூட்சுமமான முறையில் மாணிக்கக்கற்களை தாய்லாந்திற்கு கடத்திச் செல்ல முற்பட்ட இளைஞரொருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்தின் பாங்கொக் நகரிற்கு 48 இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக்கற்களை மிகவும் கூட்சுமமான முறையில் தனது கைப்பையில் மறைத்துகொண்டு செல்ல முற்படுகையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவராவார். 

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடம் விமானநிலைய சுங்க அதிகாரிகள் மாணிக்கக்கற்களை பறிமுதல் செய்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.