இந்திய பிரதிநிதியை தொடர்ந்து சீனா பிரதிநிதியும் இலங்கையில் : பின்னணி என்ன? : அமெரிக்காவின் எச்சரிக்கை கடிதத்தின் தாக்கமா?

Published By: MD.Lucias

23 Feb, 2017 | 03:59 PM
image

இந்திய வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் கடந்த 18 ஆம் திகதி இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையில் சீன பிரதிநிதி ஒருவர் கடந்த 20 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளார்.

இலங்கையுடன் இந்தியா மேற்கொள்ள உள்ள புதிய இருதரப்பு ஒப்பந்தங்கள்  மற்றும் திருகோணமலை மற்றும் வடக்கில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து எஸ்.ஜெய்சங்கர் விஜயத்தின் போது கூடிய கவனம் செலுத்தப்பட்டது.

இந்நிலையில் சீனாவில் இருந்து வந்த வெளிவிவகார பிரதி அமைச்சர் கொங் சான்யு, கடந்த 20 ஆம் திகதி வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவை சந்தித்து இரு நாட்டு உறவுகள் மற்றும் பல இராஜதந்திர விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை மரியாதையின் நிமித்தம் சந்தித்தாகவும் வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையை மையமாக கொண்டு இந்தியக் கடற்பரப்பில் தனது ஆக்கிரமிப்பை சீனா விரிவுப்படுத்தி வருவதாகவும்  இந்திய கடற்பரப்பில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பதற்கு இலங்கையே காரணமாக இருப்பதாகவும் அமெரிக்கா, இந்தியாவிற்கு அண்மையில் எச்சரிக்கை கடிதம் ஒன்றை எழுதியிருந்தது.

இந்நிலையிலேயே இருநாட்டு பிரதிநிதிகளும் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31