• 2016ம் ஆண்டு இதுவரை 12 வெற்றியாளர்கள் மொன்டேரோ ரக வாகனங்களை வெற்றிபெற்றுள்ளனர்
  • மொபிடெல் “Cash Bonanza” மொன்டேரோ எக்ஸ்ட்ராவெகன்ஸா  சீட்டிழுப்பின் மூலம் இதுவரை 3,500 லட்சம் ரூபா பெறுமதிமிக்க பணப்பரிசுகளை மொபிடெல் 675,262 வாடிக்கையாளர்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

தேசிய கையடக்க தொலைப்பேசி சேவைவழங்குனரான SLT மொபிடெல் நிறுவனத்தின் 2016 ஆண்டுக்கான “Cash Bonanza” சீட்டிழுப்புதிட்டத்தின் மூலம்  மாதாந்த மற்றும் நாளாந்த அடிப்படையில் வெற்றியாளர்களை தெரிவு செய்து ரூபா 3,500 பெறுமதியான  அதிசொகுசு மிட்சுபிசி மொன்டேரோ ரக மோட்டார் வண்டி உட்பட இலட்சக்கணக்கான பரிசுகளை வழங்கிவருகின்றது. இம்முறை மாதாந்த சீட்டிழுப்பின் வெற்றியாளராக தெஹிவளை பிரதேசத்தினை சேர்ந்த குணரத்தினராஜா ஆரியரத்தினம்  தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இது வரை 3500 இலட்சத்திற்கு அதிகமான பரிசு தொகையினை கடந்த காலங்களில் அம்பலந்தோட்டை பிரதேசத்தினை சேர்ந்த, ஷானிகா ஸ்ரீமாலி, வாரியபொலவினை சேர்ந்த, ஜே.எம்.துஷாந்த ஜயலத், படல்கும்புர பிரதேசத்தினை சேர்ந்த ஆர்.எம். ரோஷான பிரியதர்ஷன மற்றும் நிட்டம்புவ பிரதேசத்தினை சேர்ந்த ஆர்.எம்.பீ.பி.பி. குமாரி தனமல்வில பிரதேசத்தை சேர்ந்த பீ. ஏ. குசுமாவதி பதவிய ஸ்ரீ திஸ்ஸபுர பிரதேசத்தினை சேர்ந்த ஆர்.டி நிமால் ஜயசிங்க  களுத்தறை  பிரதேசத்தினை சேர்ந்த விஜித் ரோட்ரிகோ, எப்பாவலை பிரதேசத்தினை சேர்ந்த எச்.ஜே.எஸ் சமந்த சேனவிரத்ன மற்றும் திருகோணமலை பிரதேசத்தினை சேர்ந்த ராசநாயகம் அற்புதராஜா கண்;;;டி பிரதேசத்தினை சேர்ந்த பிரபாத் கிரிஷாந்த ரத்நாயக்க மற்றும்   வீரபொகுன பிரதேசத்தினை சேர்ந்த ஏ.எல் சத்குமார ஆகியோர் கடந்த சீட்டிழுப்பில் மொன்டேரோ ரக கார்களை வெற்றி பெற்றிருந்தனர். 

டீசம்பர் மாதத்திற்கான “Cash Bonanza” களியாட்டம் மற்றும் இசை நிகழ்ச்சியுடன் பரிசளிப்பு விழாவும் எம்பிலிபிட்டி பிரதேசத்தின் மஹாவலி  விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. அன்றைய தினம் இடம்பெற்ற இசைநிகழ்வின் பிரபல இசைக்குழுவான “சீதுவ சகுரா” இசைக்குழுவினர் இசை வழங்கியிருந்ததுடன் இலங்கையின் முன்னனி இசைக்கலைஞர்கள் இவ்விசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மாபெரும் சீட்டிழுப்பின் வெற்றியாளரான  ஏ.எல் குணரத்னராஜா ஆரியரத்தினம் மிட்சுபிசி மொன்டெரோ SUV ரகமோட்டார் வாகனத்தினை மொபிடெல் நிறுவனத்தின் சிரேஸ்ட பொது முகாமையாளர் (விற்பனை மற்றும் சேனல்ஸ்) சந்திக விதாரன மற்றும் மொபிடெல் நிறுவனத்தின் சிரேஸ்ட முகாமையாளர்(முற்கொடுப்பனவு மற்றும் VAS) சுநெத் ஹப்புதந்திரி அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். 

இந் நிகழ்வினையொட்டி அன்றைய தினம் வருகை தந்திருந்த 1000 இற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு இலவச மூக்குகண்ணாடிகள் வழங்கப்பட்டதுடன் அன்றைய தினம் பல்வேறு களியாட்ட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சிறுவர்களுக்கான Game zone மொபிடெல் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும்  சேவைகளை அனுபவிப்பதற்கான மொபிடெல் சேவைமத்திய நிலையமொன்று அமைக்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும். அத்துடன் உபஹார ஸ்மார்ட் போன்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இது வரை 9 வெற்றியாளர்கள் மொன்டரோ ரக வாகனத்தினை பரிசாக பெற்றுள்ளதுடன் “Cash Bonanza” 2016 பரிசளிப்புதிட்டத்தின் மூலம் இதுவரை 3,500 லட்சம்  ரூபா பெறுமதி மிக்க பணப்பரிசுசுள் 675,262  மொபிடெல் வாடிக்கையாளர்களிடையே பகிர்தளிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

மொபிடெலின் முற்கொடுப்பனவு, பிற்கொடுப்பனவு மற்றும்  ப்ரோட்பாண்ட் வாடிக்கையாளர்களும் இச்சீட்டிழுப்பில் பங்குபெறும் வாய்பினை பெற்றுகொள்ளமுடியும். ஒவ்வொரு 50 ரூபாய் பெறுமதியான ரீலோட், ரீசார்ஜ் அல்லது கட்டணப் பட்டியல் செலுத்தும் சகல வாடிக்கையாளர்களுக்கும் சீட்டிழுப்பில் கலந்துகொண்டு வெற்றி பெரும் வாய்ப்பு அதிகமாக கிட்டவுள்ளது. நாளாந்தம் மேற்கொள்ளப்படும் உடனடிசீட்டிழுப்புகளில் வெற்றிபெரும் முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு வெற்றிபெற்ற தொகைக்கு சமமான “பேசும் காலம்”இலவசமாக வழங்கப்படுவதுடன், பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் வெற்றியீட்டிய தொகை அவர்களது கட்டணப்பட்டியலின் மொத்த தொகையிலிருந்து கழிக்கப்படும்.

Cash Bonanza திட்டத்தின் வெற்றியாளர்கள் தொடர்பான விபரங்கள்,மொபிடெல் வாடிக்கையாளர்சேவை இலக்கமான 071 27 55 777 மற்றும் தபால் மூலமாக மட்டுமே வெற்றியாளர்களுக்கு அறியத்தரப்படும். இதன் போது, வாடிக்கையாளர்கள் வெற்றியீட்டிய பரிசுகளுக்காக எவ்விதமான மேலதிகக் கட்டணமும் அறவிடப்படமாட்டாது.

புகைப்பட விபரம்: 

SLT மொபிடெல் நிறுவனத்தின் “Cash Bonanza” சீட்டிழுப்பின் டிசம்பர் மாத வெற்றியாளர்  குணரத்தினராஜா ஆரியரத்தினத்தை படத்தில் காணலாம்.