ஆக்கிரமிப்புக்குள்ளாகியுள்ள நிலங்களை மீளத்தரக்கோரி பல்வேறு அமைப்புகள் இணைந்து யாழில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். பஸ் நிலையம் முன் ஆரம்பமான மேற்படி ஆர்ப்பாட்டம், பின்னர் மகஜர் ஒன்றை கையளிக்கும் பொருட்டு யாழ். மாவட்ட செயலகத்தை நோக்கி பேரணியாக புறப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலத்தை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமென கோரி விமானப்படை முகாமின் முன்பாக சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என  கடந்த மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் 23வது நாளாக இன்றுவரை தொடர்கின்றது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் பல்வேறு அமைப்புகள் இணைந்து இன்றைய தினம் அமைதியான முறையில் யாழில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.