தம்­புள்ளைப் ­பள்ளிவாசல் விவ­காரம் : ஜனா­தி­பதி தலை­யிட வேண்டும்

Published By: Robert

22 Feb, 2017 | 11:04 AM
image

தம்­புள்ளைப் பள்­ளி­வா­சலை இட­மாற்றிச் செல்­வ­தற்கும் வாகனத் தரிப்­பிடம் போன்ற விட­யங்­களைக் கருத்­திற்­கொண்டு போது­மான இட­வ­ச­தி­யு­டைய காணி­களை அதா­வது, 80 பேர்ச்சஸ் காணியை பெற்றுத் தரு­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்திரிபால சிறிசேன நேர­டி­யாகத் தலை­யிட்டு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென முஸ்லிம் முற்­போக்கு முன்­னணி  கோரிக்கை விடுத்­துள்­ளது. முஸ்லிம் கலா­சார முன்னாள் அமைச்­சரும் முஸ்லிம் முற்­போக்கு முன்­ன­ணியின் செய­ல­தி­ப­ரு­மான ஏ. எச்.எம். அஸ்வர் விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்­பிடப்பட்­டி­ருப்­ப­தா­வது,

தம்­புள்ளைப் பள்­ளி­வா­சலை வேறு இடத்­துக்கு கொண்டு செல்­வ­தற்குத் தேவை­யான போதிய இட­வ­ச­தி­களை பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் கேட்­டி­ருப்­பது குறித்து தற்­பொ­ழுது பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்­த­மான 18 பேர்ச்சஸ்  காணியை விட ஓர் அங்­கு­ல­மேனும் மேல­தி­க­மாகத் தர­மு­டி­யாது என அமைச்சர் பாட்­டலி சம்­பிக ரண­வக கூறி­யி­ருப்­பது ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்தி இருக்­கி­றது. இந்த விடயம் மரத்தால் வீழ்ந்­த­வனை மாடு ஏறி மிதிப்­பது போன்ற ஒரு செய­லாகும். ஏனெனில், பிரச்­சி­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட தம்­புள்ளைப் பள்­ளி­வா­சலை அன்­றி­லி­ருந்து அகற்­று­வ­தற்கு இந்த அர­சாங்­கத்தின் கீழ் இணங்­கிய பள்­ளி­வா­சலின் தர்­ம­கர்த்­தாக்­க­ளுக்கு இடி விழும் செய்­தி­யாக தரப்­பட்­டி­ருக்­கி­றது. மஹிந்த ராஜ­ப­க் ஷ­வி­னு­டைய ஆட்­சியின் கீழ் பல இடை­யூ­றுகள் பள்­ளி­வா­ச­லுக்கு நேர்ந்­துள்­ள­தாக அன்று பலர் குற்றம் சாட்­டி­னார்கள்.  ஆனால், அனை­வ­ருக்கும் சாதா­ரண நீதியைச் செலுத்­துவோம் என முஸ்­லிம்­க­ளு­டைய பூரண ஆத­ர­வுடன் தழைத்து வந்த இந்த நல்­லாட்­சியின் உறுப்­பி­ன­ரா­கிய அமைச்சர் சம்­பிக ரண­வக இப்­படிக் கூறியிருப்­பது கண்­டிக்­கத்­தக்­கது. மஹிந்த ஆட்­சியில், பிர­தமராக இருந்த டி.எம். ஜய­ரத்ன, தம்­புள்­ளைப் ­பள்­ளிவாசலை இட­மாற்றம் செய்து போது­மான இட­வ­சதி உள்ள காணி­களைத் தரு­வ­தா­கவும்  இட­மாற்றம் செய்த காணி­களில் வாகனத் தரிப்­பிடம் மற்றும் பூங்­கா­வனம் போன்ற வச­தி­களை அமைத்துத் தரு­வ­தா­கவும் கூறி­யதை இந்த நேரத்தில் நான் ஞாப­க­மூட்ட விரும்­பு­கிறேன்.  

ஷரிஆ நீதி­யையே கண்­டித்து நூல் எழு­திய ஒரு­வ­ரி­ட­மி­ருந்து முஸ்­லிம்கள் எந்­த­வி­த­மான நீதி­யையும் எதிர்­பார்க்க முடி­யாது. எனவே, இந்த விட­யத்தில்  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேர­டி­யாகத் தலை­யிட்டு தம்­புள்ளைப் பள்­ளி­வா­சலை இட­மாற்றிச் செல்­வ­தற்கும் வாகனத் தரிப்­பிடம் போன்ற விட­யங்­களைக் கருத்திற்கொண்டும் போதுமான இடவசதியுடைய காணிகளை அதாவது, 80 பேர்ச்சஸ் காணியை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுப்பது நல்லிணக்க அரசாங்கம் முஸ்லிம்களுக்கு செய்யக் கூடிய பெரும் கைங்கரியமாகும் என்றும் நாம் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம் - என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37