தாஜுதீன் கொலை காணொளி தெளிவில்லை நீதிமன்றத்திற்கு தெரிவிப்பு

Published By: Raam

06 Jan, 2016 | 07:37 AM
image

தாஜுதீன் கொலை தொடர்பில் ஆதரமாக இருந்த சி.சி.டி.வி காணொளி தெளிவில்லாத காரணத்தால் தகவல்களை பெறமுடியாமலுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

மேலும்,பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் மர்ம மரணம் தொடர்­பி­லான சி.சி.ரி.வி.கண்­கா­ணிப்பு கமரா பதி­வு­களை அமெ­ரிக்­காவின் எப்.பி.ஐ., எம்.பி.எஸ் அல்­லது இங்­கி­லாந்தின் ஸ்கொட் லன்ட் யார்ட் சட்ட விஞ்­ஞானம் தொடர்­பி­லான ஆய்வு கூடங்­க­ளுக்கு அனுப்பி பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­து­வது சிறந்­த­தாக அமையும் என கொழும்பு பல்­க­லைக்­க­ழகம் நீதி­மன்­றுக்கு அறி­வித்­துள்­ளது.

கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரி­ஸிடம் நேற்று அறிக்கை ஒன்­றூ­டாக இந்த விட­யத்தை கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் கணினி விஞ்­ஞான பிரிவு அறி­வித்­தது.

தாஜுதீன் விவ­கா­ரத்தில் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் மீட்­கப்­பட்­டுள்ள சீ.சீ.ரி.வி. காட்­சிகள் தொடர்பில் தற்­போது கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் கணினி விஞ்­ஞான பிரிவு ஆய்வு செய்து வருகிறது.

இந்நிலையில் 14 நாட்­க­ளுக்குள் அது தொடர்­பி­லான அறிக்­கையை மன்­றுக்கு தெரி­யப்­ப­டுத்த வேண்டும் எனவும் தேவை ஏற்­படும் பட்­சத்தில் வெளி நாட்டு தொழில் நுட்­பத்தை பயன்­ப­டுத்­து­வ­தற்கும் அனு­மதி பெற்­றுக்­கொள்­ளலாம் என கடந்த டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி கொழும்பு மேல­திக நீதிவான் உத்­த­ரவு பிறப்­பித்த நிலை­யி­லேயே நேற்று அவ்­வ­றிக்கை சமர்­பிக்­கப்­பட்­டது.

நீதி­மன்ற விடு­மு­றையின் பின்னர் மன்றின் நட­வ­டிக்­கைகள் நேற்று முன் தினம் முதல் ஆரம்­பிக்­கப்­பட்ட நிலையில், இடை­யீட்டு மனு­வொன்­றூ­டாக வஸீம் தாஜுதீன் விவ­காரம் தொடர்­பி­லான வழக்­கினை நேற்று மீண்டும் திறந்த மன்­றுக்கு விசா­ர­ணைக்கு எடுத்தபோதுகொழும்பு பல்­க­லைக்­க­ழக்த்தின் கணினி விஞ்­ஞான பிரிவு இந்த அறிக்­கையை சமர்­ப்பித்­தது.

குறித்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைய­ளிக்­கப்­பட்ட சீ.சீ.ரி.வி.காட்­சி­களில் சந்­தே­கத்­துக்கு இட­மான வாகனம் ஒன்று உள்­ளது. எனினும் அந்த காட்­சி­களின் தெளிவின்மை மற்றும் எமது ஆய்­வு­கூ­டத்தில் உள்ள தொழில் நுட்ப கட்­டுப்­பா­டுகள் கார­ண­மாக அந்த வாக­னத்தின் இலக்கத் தகட்டைக் கூட சரி­யாக அடை­யாளம் காண முடி­யா­துள்­ளது.

நார­ஹேன்­பிட்டி மற்றும் கிரு­ளப்­பனை ஆகிய பகு­தி­களில் இருந்து பெறப்­பட்­ட­தாக கூறப்­படும் அந்த நான்கு சீ.சி.ரி.வி.காட்­சி­க­ளையும் நாம் சோத­னைக்கு உட்­ப­டுத்­தினோம். எனினும் வீதி விளக்­கு­களின் வெளிச்சம் மற்றும் வாக­னத்தின் வெளிச்­சத்­துக்கு மத்­தியில் பதி­வா­கி­யுள்ள இந்த வீடியோ காட்­சி­களில் இலக்கத் தக்­கட்டை தெளி­வாக அடை­யாளம் காண முடி­யா­துள்­ளது.

அத்­துடன் டப்­ளியூ.பீ.கே.யூ - 6543 என்ற சந்­தே­கத்­துக்கு இட­மான வாக­னத்தில் பய­ணிப்­ப­வர்­களை அடை­யாளம் காண முடி­யா­துள்­ளது என அந்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முன்­ன­தாக கடந்த 2015 டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி இடம்­பெற்ற வஸீம் தாஜுதீன் விவ­காரம் தொடர்­பி­லான வழக்கின் போது, குற்றப் புல­னாய்வுப் பிரிவின் மனிதப் படு­கொ­லைகள் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி விம­ல­சிரி ரவீந்­திர நீதிமன்றுக்கு சமர்ப்பித்த மேல­திக விசா­ரணை அறிக்கையில்

' நாம் முன்­னெ­டுத்த விஷேட விசா­ர­ணை­க­ளுக்கு அமை­வாக நார­ஹேன்­பிட்டி பிர­தான சந்தி மற்றும் கிரு­ளப்­பனை சந்தி ஆகி­ய­வற்றில் உள்ள சீ.சீ.ரி.வி. கண்­கா­ணிப்பு கம­ராக்கள் ஊடாக இந்த விவ­கா­ரத்­துடன் தொடர்­பு­பட்ட சில பதி­வு­களை மீட்­டுள்ளோம்.

அவை தற்­போது மேல­திக ஆய்­வு­க­ளுக்­காக கொழும்பு பலக்­லைக்­க­ழ­கத்தின் கணினி விஞ்­ஞான ஆய்­வ­கத்­துக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன. அந்த சீ.சி.ரி.வி. காட்­சி­களில் தெளி­விண்மை கார­ண­மா­கவே அவற்றை நாம் ஆய்­வுக்கு அனுப்­பி­யுள்ளோம்.

அதில் குறிப்­பிட்ட நேரத்தில் அந்த இரு சந்­தி­க­ளிலும் தாஜு­தீ­னு­டை­யது என சந்­தே­கிக்­கத்­தக்க வகனம் அங்­கு­மிங்கும் பய­ணிக்­கின்­றது. இவ்­வாறு இரு சந்­தர்ப்­பங்கள் பதிவில் உள்­ளன. அத்­துடன் அந்த காரினைப் பின் தொடர்ந்து மேலும் ஒரு வாகன தொட­ரணி வேக­மாக பய­ணிப்­பதும் எமது அவதானிப்புக்கு உட்­பட்­டுள்­ளது. எனினும் தெளி­வற்ற அந்த படங்­களை வைத்து ஸ்திர­மான ஒரு முடி­வினை எம்மால் எடுக்க முடி­யாமல் உள்­ளது. உண்­மையில் அந்த கார் வஸீ­மு­டை­யதா, பின்னால் தொடர்ந்து வரும் வாகனத் தொட­ரணி யாரு­டை­யது மற்றும் அதில் உள்­ள­வர்கள் யார் போன்ற கேள்­வி­க­ளுக்கு விடை காணவே மேல­திக ஆய்­வு­க­ளுக்கு அந்த கண்­கா­ணிப்பு கமரா பதி­வுகள் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன.

நான்கு மணி நேர பதி­வினைக் கொண்ட அந்த சீ.சி.ரீ.வி. பதி­வுகள் நான்கு இறு­வட்­டுக்­க­ளாக ஆய்­வுக்கு சமர்­பிக்­கப்­பட்­டுள்­ளன. அதன் அறிக்கை கிடைத்­ததும் அது குறித்த மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க முடி­யு­மாக இருக்கும். என குறிப்­பிட்­டி­ருந்தார்.

இதற்கு அப்­போது உத்­த­ர­வு­களைப் பிறப்­பித்த கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரிஸ்,' குற்றப் புல­னாய்வுப் பிரிவின் கோரிக்­கை­களை இந்த மன்று கவ­னத்தில் கொள்­கின்­றது. கடந்த 2015.03.09 ஆம் திகதி முதல் இந்த வழக்கு எனது வழி நடத்­தலில் விசா­ரிக்­கப்­ப­டு­கின்­றது. அவ்­வப்­போது தேவை­யான அனைத்து உத்­த­ர­வு­க­ளையும் நான் பிறப்­பித்து வரு­கின்றேன். கடந்த 9 மாதங்­க­ளாக பிறப்­பிக்­கப்­பட்ட உத்­த­ர­வுகள் அனைத்தும் குறைந்த காலப்­ப­கு­திக்குள் நிறை­வேற்றத் தக்­க­தா­கவே அமைந்­தி­ருந்­தன. எல்லா உத்­த­ர­வு­க­ளையும் ஒறு மாதத்­துக்குள் நிறை­வேற்றும் வித­மா­கவே நான் வழங்கி வந்தேன்.

இந் நிலையில் கைப்­பற்­றப்­பட்ட சீ.சி.ரி.வி. கட்­சிகள் தொடர்­பி­லான ஆய்­வ­றிக்கை இன்னும் எனக்கு கிடைக்­க­வில்லை. அதன்­படி அந்த அறிக்­கை­யினை அடுத்து வரும் 14 நாட்­க­ளுக்குள் மன்றில் சமர்­ப்பிக்க கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் கணினி விஞ்­ஞான நுட்பப் பிரி­வுக்கு நான் கட்­டளை பிறப்­பிக்­கின்றேன். இந்த கால அவ­காசம் போதாது என அவர்கள் கரு­தினால் மன்றில் முன்­னி­லை­யாகி போது­மான கால அவ­கா­சத்தை பெற்­றுக்­கொள்ள முடியும்.

இந்த அறிக்­கையை முன் வைப்­ப­தற்­காக குறித்த சீ.சீ.ரி.வி. காட்­சி­களை ஆராய இலங்­கையில் உள்ள தொழில் நுட்­பங்கள் போது­மா­ன­தாக இல்­லை­யெனில் வெளி நாட்டு தொழில் நுட்­பத்தை பயன்­ப­டுத்­து­மாறு நான் ஆலோ­சனை வழங்குகின்றேன். அவ்­வாறு வெளி நாட்டு தொழில் நுட்பம் தேவைப் படின் அது தொடர்பில் அந்த 14 நாட்­க­ளுக்குள் அறி­வித்து அனு­ம­தி­யினைப் பெற்­றுக்­கொள்ள முடியும்.' என உத்­த­ர­விட்­டி­ருந்தார்.

தாஜுதீன் கொலையுடன் சம்பந்தப்பட்ட சி.சி.டி.வி காணொளியின் தரவுகளை மேலதிக பரிசோதனைக்காக கொழும்பு பல்கலைக்கழகத்திடம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02