இலங்கை - அவுஸ்திரேலியா மோதும் மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு-20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்த போட்டி இலங்கை நேரப்படி இன்று மதியம் 2.20 ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டியை பொறுத்தவரையில் அவுஸ்திரேலிய அணிக்கு மிக முக்கியமான போட்டியாகும்.

சொந்த மண்ணில் அவுஸ்திரேலியா தொடரை இழந்த நிலையில், இந்த போட்டியில் கட்டயா வெற்றியை பெற வேண்டிய நோக்கில் களமிறங்கும்.

இன்றைய போட்டியில் அவுஸ்திரேலிய அணி சார்பில் சுழல் பந்து வீச்சாளர் அடம் சம்பா இணைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது.

இதேபோல் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ள இலங்கை அணிக்கு ஒரே ஒரு தடுமாற்றம் டிக்வெல்ல அணியில் இல்லாதது எனலாம்.

எனினும் இந்த போட்டியிலும் வெற்றிபெற்று அவுஸ்திரேலிய அணியை வைட்வொஷ் செய்ய வேண்டும் என்ற இலக்குடனெ இலங்கை களமிறங்கும்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கும் டிக்வெல்ல கடந்த போட்டிகளில் அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்ததுடன், அவுஸ்திரேலிய பந்தவீச்சாளர்களுக்கு கடும் சவாலாகவும் இருந்தார்.

டிக்வெல்லவுக்கு இரண்டு போட்டிகளில் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய போட்டியில் டிக்வெல்லவுக்கு பதிலாக தசுன் சானக களமிறக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

இன்றைய போட்டியில் டிக்வெல்லவுக்கு பதில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக டில்சான் முனவீர களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோல் விக்கட் காப்பாளராக குசால் மெண்டிஸ் செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளும் தங்களுக்குள் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி, முதல் இரண்டு போட்டிகளில் விட்ட தவறுகளை திருத்திக்கொண்டு சிறப்பான போட்டியொன்றை தமது ரசிகர்களுக்கு கொடுக்க எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கின்றது.

இதனால்  இன்றைய போட்டியில் விறுவிறுப்பு மற்றும் சுவாரஷ்யத்துக்கு பஞ்சமிருக்காது எனலாம்.