மண் மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தார் சிவமோகன் எம். பி.

Published By: Priyatharshan

21 Feb, 2017 | 04:26 PM
image

கேப்பாபுலவு, புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் தமது நிலங்களை விடுவித்து தருமாறு கோரி மண் மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பாராளுமன்றத்துக்கு செல்லாது மக்களோடு உணவுதவிர்ப்பு போராட்டத்தில்  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  சிவமோகன் ஈடுபட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு புதுமாத்தளன் வீதியில் பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேறுமாறு கோரியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று பத்தொன்பதாவது நாளை  எட்டியுள்ள அதேவேளை சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று எட்டாவது நாளாக இடம்பெறுகிறது.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் தமது நிலங்களை விடுவித்து தருமாறு கோரி மண் மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று பாராளுமன்றத்துக்கு செல்லாது மக்களோடு உணவுதவிர்ப்பு போராட்டத்தில்  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  வைத்திய கலாநிதி  சிவமோகன் ஈடுபட்டுள்ளார்.

இந்த போராட்டம் கடந்த மூன்றாம் திகதி முதல் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால்  இடம்பெற்று வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 49 பொதுமக்களுக்கு சொந்தமான 19 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு தெரிவித்தே, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுபட்டுள்ளனர்.

எனினும் கடந்த 9 ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிலர்  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய போதும் இதுவரை எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன்  கருத்து தெரிவிக்கையில்,

பலதடவைகள் பாராளுமன்றில் கதைத்தும் காணிப்பிரச்சினை தொடர்பாக  எந்த பதிலும் கிடைக்கவில்லை எனவே பாராளுமன்றிற்கு சென்று எந்த பலனுமில்லை. அதானால் அந்த பாராளுமன்றுக்கு சென்று எதுவும் ஆகப்போவதில்லை அதனால் நான் இன்று  விடுவிப்புக்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31