களுத்துறை - கட்டுக்குறுந்த கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதுமாத்திரமின்றி விபத்தில் காயங்களுக்கு உள்ளானவர்களின் குடும்பங்களுக்கு ரூபா 20 ஆயிரம் வழங்க இருப்பதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 20 ஆம் திகதி களுத்துறை - கட்டுக்குறுந்த கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.