நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வளங்கள்  அமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்துள்ளார். 

நேற்று குருணாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒரு லீற்றர் நீரை சுத்திகரிப்பதற்கு 48 ரூபா செலவிடப்படுகின்ற நிலையில், குறித்த நீர் 12 ரூபாவுக்கு வழங்கப்படுகின்றது.

தொடர்ந்தும் இவ்வாறு வழங்குவதால் அரசுக்கு நட்டம் ஏற்படும், எனவே சிறியளவில் நீர் கட்டணத்தை அதிகரிக்க எண்ணியுள்ளதாக அவர் தெரிவித்தார்.