பகிடிவதை என்ற பெயரில் பேரா­தனை பல்­கலை மாணவர்கள் நிர்வாணப்படுத்தி துன்புறுத்தல்

Published By: Raam

21 Feb, 2017 | 10:59 AM
image

பேரா­தனைப் பல்­கலைக்கழ­கத்தின் விவ­சாய பீடத்தின் புதிய மாண­வர்கள் எட்டு பேரை நிர்­வா­ணப்­ப­டுத்தி துன்­பு­றுத்தி பகி­டி­வ­தைக்­குட்­ப­டுத்­திய 15 மாண­வர்­ க­ளையும் எதிர்­வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு கண்டி நீதிமன்ற நீதவான் உத்­த­ர­விட்­டுள் ளார்.

பகி­டி­வதை சம்­பவம் நேற்று முன் தினம் இரவு மெகொட கலி­க­முவ என்ற இடத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

விவ­சாயப் பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாண­வர்கள் சிலர் பேரா­தனை பொலிஸ் பிர­தே­சத்தில் மெகொட கலி­க­முவ என்ற இடத்தில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வரு­கின்­றனர். இவர்­களில் சிலர் புதிய மாண­வர்கள் 8 பேரை கடத்திச் சென்று இவ் வாடகை வீட்டில் வைத்து நிர்­வா­ண­மாக்கி பல வகை­யான துன்­பு­றுத்­தல்­க­ளுக்கு உள்­ளா­க்கி­ய­துடன் தாக்­கி­யு­முள்­ளனர்.

இப் பகி­டி­வதை குறித்து பல்­க­லைக்­க­ழக உயர் அதி­கா­ரி­க­ளுக்கு முறைப்­பா­டுகள் கிடைக்­கப் ­பெற்­ற­தை­ய­டுத்து அதி­கா­ரிகள் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்­க­ளுடன் குறிப்­பிட்ட வாடகை வீட்டை சோத­னை­யிட்டு பகிடி­வதை புரிந்­த­வர்கள் என சந்­தே­கப்­ப டும் 15 மாண­வர்­களை பேரா­தனை பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளனர்.

இவர்­களை கைது செய்த பொலிஸார் கண்டி நீதிவான் நீதி­மன்­றத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை ஆஜர் செய்­த­ போது நீதிவான் இவர்­களை எதிர்­வரும் மார்ச் 02 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்­டுள்ளார். பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட 08 மாணவர்களும் தற்போது பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத் தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48