ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நீதி­மன்ற  சேவை­களில் தலை­யீடு செய்­துள்ளார். இதனால் நீதி­மன்ற சேவையின் சுயா­தீன தன்­மையை கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்ளார். இதற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மக்­க­ளி­டத்தில் மன்­னிப்பு கோர வேண்டும்.அவ்­வாறு இல்­லா­விடின் அவ­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வர நேரிடும் என தூய்­மை­யான ஹெல உறு­மய அமைப்பின் தலைவர் உதய கம்­மன்­பில தெரி­வித்தார்.

தூய்­மை­யான ஹெல உறு­மய அமைப்பின் தலைமை அலு­வ­ல­கத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து ­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மட்­ட­க்க­ளப்பில் சேவை­யாற்­றி­ வந்த இரா­ம­நாதன் கண்ணண் என்ற சட்­டத்­த­ர­ணியை ஜன­வரி 31 ஆம் திக­தி­யன்று பிர­தம நீதி­ய­ர­ச­ராக நிய­மித்து முழு சட்­டத்­து­றை­யி­னையும் தளம்­ப­ல­டையச் செய்­துள்ளார். 

மேற்­படி இரா­ம­நாதன் கண்ணன் என்­பவர் இவர் 2006 மற்றும் 2007 ஆம் ஆண்­டு­களில் உயர் நீதி­ய­ர­சர்­க­ளுக்­கான தேர்­வு­களில் சித்­தி­ய­டை­ய­வில்லை. அந்த பரீட்­சையில் சித்­தி­ய­டைந்­த­வர்கள் தற்­போதும் நீதி­வான்­க­ளாக சேவை­யாற்­று­கின்­றனர். சித்­தி­ய­டை­யா­தாவர் மேல் நீதி­மன்ற பத­வியில் அர­சியல் தலை­யீட்­டுடன் நிய­மிக்­கப்­ப­டு­கின்றார்.

அதனால் ஏனைய சட்­டத்­து­றையின் சேவை­யாற்றும் அதி­கா­ரி­களும் அர­சியல் வாதி­களின் பின்னால் செல்ல ஆரம்­பிப்­பார்கள்.மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளுக்­கான பரீட்­சை­க­ளுக்கு முகம்­கொ­டுக்­கவும் மாட்­டார்கள். இது எவ்­வா­றி­ருப்­பினும்  சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்­தி­னரின்  கோரிக்­கையின் பிர­கா­ரமே இந்த நிய­மனம் வழங்­கப்­பட்­டது என்­று ­ஜ­னா­தி­பதி  கூறு­கிறார். 

சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் தாம் அவ்­வா­றான ஒரு கோரிக்­கை­யினை ஒரு­போதும் விடுக்­க­வில்லை என்று கூறு­கின்­றது. தற்­போது நீதி அமைச்சர் தன்­னி­டத்தில் ஒரு அர­சியல் கட்சி, குறித்த சட்­டத்­த­ர­ணியை மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­யாக  நிய­மிக்க வேண்டும் என கோரி ஒரு அர­சியல் கட்சி எனக்கு கோரிக்கை விடுத்­தது என்றும்  எனினும் ஆனால் அந்த கோரிக்­கைக்கு தான் இணங்­க­வில்லை என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

 எனவே அமைச்­சர்­களும் அர­சியல் கட்­சி­களும் ஜனா­தி­ப­தியும் உயர் நீதி­மன்ற நீதி­ப­தி­களை  தெரிவு செய்­வார்­க­ளாயின் 19 ஆவது திருத்­தத்தில் கொண்­டு­வ­ரப்­பட்ட நீதி சேவை­க­ளுக்­கான சுயா­தீன ஆணைக்­குழு எங்கு சென்­றது. அர­சி­ய­லமைப்பின் 111 ஆம் இலக்கச் சட்­டத்தின் பிர­காரம் ஜனா­தி­ப­திக்கு நிய­மனப் பத்­தி­ரத்தில் கைச்சாத்­தி­டக்­கூ­டிய அதி­காரம் மாத்­தி­ரமே உள்­ளது. 

அதே­நேரம் இந்த பத­விக்கு தெரி­வா­கின்­ற­வர்கள் மாவட்ட நீதி­வான்­க­ளாக அல்­லது சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தில் கட­மை­யாற்­றி­ய­வர்­க­ளாக இருக்க வேண்டும். அதனால் சட்­டமா அதி­ப­ரி­டத்­திலும் இது குறித்து ஆலோ­சிக்­கப்­படும். எவ்­வா­றா­யினும் ஜனா­தி­ப­தியின்  கூற்றில் உண்­மை­யி­ருந்­தாலும்  அவர் தன்­னி­டத்தில் விடுக்­கப்­பட்ட கோரிக்­கையை மறுத்­தி­ருக்க வேண்டும்.

 ஆனால் தேசத்தின் துர­திர்ஷ்டம் கார­ண­மாக அவ்­வாறு நடக்­க­வில்லை.  ஆனால் இந்த சட்­டத்­த­ரணி இரா­ம­நாதன் கண்ணண் என்­ப­வரின் நிய­ம­னத்தில் கடு­மை­யான குற்­றங்கள் நான்கு உள்­ளன. முத­லா­வது தவ­றாக  மேல் நீதி­மன்ற நீதி­பதி உட்­பட சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் அதி­கா­ரி­களை  சேர்ந்து முன்­னெ­டுக்க வேண்­டிய ஒரு செயற்­பாட்டில் ஜனா­தி­பதி தலை­யீடு செய்­துள்ளார்இ இரண்­டா­வது தவறு அர­சி­யல்­வாதி ஒரு­வ­ரினால் சட்­டத்­து­றையின் சேவை­யாளர் ஒரு­வரின் பெயர் பரிந்­து­ரைக்­கப்­பட்­டது. நாங்கள்  பத்து வருட ஆட்­சியில் என்றும் அவ்­வாறு செய்­ய­வில்லை அந்த கால­சாரம் தற்­போது தான் ஆரம்­பிக்­கின்­றது. இதில் மூன்றாம் தவறு பரீட்சையில் சித்திபெறாத ஒருவரை உயர் பதவி ஒன்றில் அமர்த்தி பரீட்சையில் சித்தியடைந்த சட்டத்துறையை சார்ந்தவர்களுக்கு  அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால செய்த தவறை ஏற்றுகொண்டு இனி இந்த தவறை செய்யப்போவதில்லை   என்று நாட்டு மக்களிடத்தில் மன்னிப்பு கோர வேண்டும் இல்லாவிட்டால் இது ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும் ஒரு தவறாக மாறிவிடும்.