‘வேட்டை’ படத்திற்கு பிறகு மாதவன் நடிக்கும் படம் ‘இறுதிச் சுற்று’. இதனை துரோகி என்ற படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கே பிரசாத் இயக்குகிறார். இந்த படத்தில் மாதவன் குத்துச் சண்டை பயிற்சியாளராக நடிக்கிறார். ரித்திகா சிங் மற்றும் மும்தாஜ் சர்கார் ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்கும் இப்படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்திருக்கிறார் ரித்திகா சிங். இவர் உண்மையான குத்துச்சண்டை வீரரும் கூட. படத்தில் நடிகர் தனுசின் ரசிகையாக வரும் இவர், குத்துச்சண்டையை கற்பதற்காக மாதவனிடம் சேர்கிறார். அதன் பின் இவர்களுக்குள் நடைபெறும் சம்பவங்களே இறுதிச்சுற்று படத்தின் திரைக்கதைஇ

இந்நிலையில் படத்தின் முன்னோட்டம் அண்மையில் திரையிடப்பட்டது. இதில் முதல்காட்சியில் மாதவன் படுக்கையறையில் இருக்கும் காட்சி இடம்பெற்றது. இதுகுறித்து மாதவனிடம் கேட்டபோதுஇ நான் இந்த படத்தில் சொக்லெட் பாய் என்ற இமேஜ் மாறி, சொக்லெட் மேன் என்ற இமேஜ் வரும் என்று நினைக்கிறேன். இதில் நான் குத்துச்சண்டை பயிற்சியாளராக இருந்தாலும் நானும் சாதாரண மனிதனைப் போலவே இருப்பேன் அதாவது வுமனைஸராக இருப்பேன். பட் த சேம் டைம் ஒரு வித்தியாசமான படத்தை நீங்கள் காணவிருக்கிறீர்கள்’ என்றார்.

தகவல் : சென்னை அலுவலகம்