இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருந்த புதிய அர­சி­ய­ல­மைப்பு பணிகள் இன்­றைய தினம் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. இதன்­பி­ர­காரம் அர­சி­ய­ல­மைப்­பிற்­கான பிர­தான வழி­ந­டத்தல் குழு இன்­றைய தினம் கூட­வுள்­ளது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் வழி­ந­டத்தல் குழு கூட­வுள்­ளது.  புதிய அர­சி­ய­ல­மைப்பு பணிகள் ஆரம்­பிக்கும் நோக்கில் முழு பாரா­ளு­மன்­றமும் அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபை­யாக மாற்­றப்­பட்­டது. 

இதன்­பி­ர­காரம் அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிப்­ப­தற்­கான வழி­ந­டத்தல் குழுவும் நிறு­வப்­பட்­டது. பிர­தான வழி­ந­டத்தல் குழுவின் கீழ் ஆறு உப­கு­ழுக்­களும் நிறு­வப்­பட்­டன.

இதன்­பி­ர­காரம் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை தயா­ரிப்­ப­தற்­கான முத­லா­வது அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபை கடந்­த வருடம் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி கூடி­யது. அது­தொ­டக்கம் அர­சி­ய­ல­மைப்­பினை தயா­ரிப்­ப­தற்­கான பணிகள் ஆரம்­பிக்­கப்­பட்டு  தொட­ரப்­பட்­டது. உப குழு அறிக்­கை­களும் அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபையில் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. எனினும் இதற்­கான விவாதம் இது­வரை நடத்­தப்­ப­ட­வில்லை. 

அர­சி­ய­ல­மைப்­பினை தயா­ரிப்­ப­தற்­கான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்­கையும் இது­வரை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை. இந்­நி­லையில் வழி­ந­டத்தல் குழுவின் நட­வ­டிக்­கை­களும் தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருந்­தன. அர­சி­ய­ல­மைப்பு பணிகள் இடை­நி­றுத்­தப்­பட்­டமை தொடர்பில் பாரா­ளு­மன்­றத்­திலும் சர்ச்­சை­யான நிலைமை ஏற்­பட்­டது.  இந்­நி­லையில் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கும்   பணிகள் இன்­றைய தினம் மீளவும் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன.

இதன்­பி­ர­காரம் இன்று பாரா­ளு­மன்­றத்தில் அர­சி­ய­ல­மைப்­பிற்­கான வழி­ந­டத்தல் குழு கூட­வுள்­ளது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் பிர­தான வழி­ந­டத்தல் குழு கூட­வுள்­ளது. அத்துடன் வழிநடத்தல் குழுவின் நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அறிக்கையொன்று கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியலமைப்பு தயாரிப்பு நடவடிக்கைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிடவுள்ளதாகவும் தெரியவருகின்றது.